15 வயது சிறுவனைக் கொன்ற நண்பர்கள்! ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டல்!
Manoj Bharathiraja: மனோஜ் பாரதிராஜா மறைவு; இறுதிச் சடங்கு எங்கே, எப்போது?
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா நேற்று (25.03.2025) காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மனோஜ் பாரதிராஜா சில நாட்களுக்கு முன்பு இதய சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
இயக்குநர் பேரரசு பகிர்ந்த இரங்கல் குறிப்பில், "தந்தை மகனுக்குக் கொல்லி வைத்தது போன்ற துயரம் யாருக்கும் நடக்கக்கூடாது.
அவருக்கு இதயத்தில் பிரச்சனை இருந்தது. நாளை தான் check up வரச் சொல்லி இருப்பதாகச் சொன்னார். ஆனால் அதற்குள் இப்படி ஆகிவிட்டது.

பாரதி ராஜா சாருக்கும் கொஞ்ச நாட்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் இருந்தது. அவருடைய குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்" என்று தெரிவித்துள்ளார்.
Manoj Bharathiraja இறுதிச் சடங்கு
மனோஜ் பாரதி ராஜாவின் உடல் தற்போது அவருடைய சேத்துபட்டு இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.
தகவல் அறிந்ததுமே பாரதி ராஜா சேத்தபட்டு இல்லத்திற்கு மகனின் உடலைக் காண வந்துள்ளார். அங்கிருந்து உடலை நீலாங்கரை இல்லத்துக்கு எடுத்துச்செல்கின்றனர்.
மனோஜ் பாரதிராஜாவின் உடல் புதன்கிழமை மாலை 3 மணி வரை நீலாங்கரை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அதன் பிறகு உடல் பெசன்ட் நகர் மின் மயானத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது எனது தகவல்கள் தெரிவிக்கின்றன.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...