பட வாய்ப்புக்காக ஹார்மோன் ஊசி போட்டுக்கொண்ட சிறகடிக்க ஆசை நடிகை!
"யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு செய்தேன்" - சிவகங்கை இளைஞர் கைது; கூட்டாளிகளுக்கு வலைவீச்சு
சிவகங்கை மாவட்டத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த குற்றத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், சாதி ரீதியான மோதல்கள் உள்ளிட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் வகையில் சிவகங்கை மாவட்ட காவல்துறையினர் ரோந்து சென்று தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள்.
அந்த கண்காணிப்பின் ஒரு பகுதியாகச் சிவகங்கை தாலுகா போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ தலைமையில் காவலர்கள் ரோந்து சென்றபோது ஓட்டக்குளம் கண்மாய்க்கரை புதரில் மறைவாக ஒரு இளைஞர் இருப்பதைக் கண்டனர்.

அருகில் சென்று பார்த்தபோது அங்கு வெடி மருந்து, திரி, சணல், வயர் போன்ற பொருட்களுடன் இருந்த இளைஞரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
விசாரித்தபோது, கீழக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதான மகேஸ்வரன், பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு எங்கேயும் செல்லாமல் ஊர்சுற்றி வந்துள்ளதும், இங்கு அமர்ந்து நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்து வந்ததும் தெரிய வந்தது.
நண்பர்கள் சந்தோஷகுமார், ரமேஷ்குமார், கர்லா ரமேஷ், சூர்யா ஆகியோருடன் யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு செய்ய கற்றுக் கொண்டதாக மகேஸ்வரன் தெரிவித்ததைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், அங்கிருந்த 4 நாட்டு வெடிகுண்டுகளுடன் வாள் ஒன்றையும் கைப்பற்றி, மகேஸ்வரனைக் கைது செய்தனர்.

ஏற்கனவே பல்வேறு இடங்களில் வழக்குகள் உள்ள கூட்டாளிகள் நான்கு பேரையும் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே வெடிகுண்டுகள் தயாரிக்க இவர்களுக்குப் பொருட்கள் எங்கிருந்து கிடைத்தது?, என்ன நோக்கத்திற்காக வெடிகுண்டுகள் தயாரித்தார்கள்?, இவர்களின் பின்னணியில் வேறு யாரும் இருக்கிறார்களா? என்று தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/crf99e88