செய்திகள் :

போதையில் நண்பரை மதுபாட்டிலால் அடித்துக் கொன்ற இளைஞர்

post image

கோவை ஈச்சனாரி பகுதியில் கட்டுமான பொருள்களை விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. 

இங்குத் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சியாம் ஆகிய இரண்டு பேர் ஓட்டுநர்களாகப் பணியாற்றி வந்தனர்.

சம்பவம் நடந்த இடம்

இவர்களுக்கு அந்த நிறுவனம் அமைந்துள்ள பகுதியிலேயே அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு நேற்று (மார்ச் 25) இரவு இருவரும் இணைந்து மது அருந்தியுள்ளனர்.

ஆறுமுகம் தூங்கிய நிலையில் சியாம் தொலைக்காட்சியில் அதிக சத்தம் வைத்து பாட்டுக் கேட்டுள்ளார். தூக்கம் பாதிக்கப்பட்டதால் இதுகுறித்து சியாமிடம் ஆறுமுகம் முறையிட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மதுபோதை

ஒரு கட்டத்தில் சியாம் ஆறுமுகத்தை ஆக்ரோஷமாகத் தாக்கத் தொடங்கியுள்ளார். ஆறுமுகத்தின் தலையில் மதுபாட்டிலால் தாக்கியுள்ளார். இதில் ஆறுமுகம் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடியுள்ளார்.

சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சத்தியமூர்த்திக்குத் தகவல் சொல்லியுள்ளனர். அவர் ஆறுமுகத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துவிட்டார்.

ஆறுமுகம்

சியாம் அங்கிருந்து தப்பியோடிவிட்டார் சுந்தராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சியாமைத் தேடி வருகிறார்கள். அவர் மீது ஏற்கெனவே சில வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

திண்டுக்கல்: நிலத்தகராறில் 3 பேர் கொலையா? கிணற்றில் உடல்களைத் தேடிய போலீஸார்; நடந்தது என்ன?

திண்டுக்கல் அருகே அணைப்பட்டியில் இருதரப்புக்கும் இடையில் நிலப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.இதில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களின் உடல்கள் அணைப்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் வீச... மேலும் பார்க்க

சைபர் கிரிமினல்களிடம் ரூ.50 லட்சத்தை இழந்த வயதான தம்பதி தற்கொலை

இணையத்தளக் குற்றவாளிகள் பெண்கள் மற்றும் முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடம் இருக்கும் பணத்தைப் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன. அதிகமானோர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ள... மேலும் பார்க்க

கிரிக்கெட்டர் முதல் ஐடி ஊழியர் வரை - உயர் ரக போதை பொருளால் கோவையை கலங்கடித்த நெட்வொர்க்!

கோவை மாவட்டத்தில் உயர் ரக போதை பொருள்கள் அதிகளவு பயன்படுத்துவதாக புகார் உள்ளது. இந்நலையில் ஆர்.எஸ்.புரம் சுற்று வட்டார பகுதிகளில் உயர் ரக போதை பொருள்கள் விற்பனை செய்யும் ஒரு நெட்வொர்க் குறித்து காவல்த... மேலும் பார்க்க

`கொலை செய்துவிட்டேன், சொல்லிவிடுங்கள்...' - மனைவியைக் கொன்று சூட்கேஸில் உடலை அடைத்த இன்ஜினீயர்

இந்தியாவில் பெங்களூரு சாஃப்ட்வேர் தலைநகரமாக விளங்குகிறது. இதனால் நாடு முழுவதும் இருந்து சாப்ட்வேர் இன்ஜினீயர்கள் பெங்களூரு வந்து வேலை செய்கின்றனர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மும்பையை சேர்ந்த ராக... மேலும் பார்க்க

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கிய 70 வயது பாடகர்... ரூ.1.2 கோடியைப் பறித்த சைபர் கிரிமினல்கள்!

நாடு முழுவதும் அப்பாவி மக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடமிருந்து பணத்தை பறிக்கும் சம்பங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. மும்பை, ஐதராபாத் போன்ற நகரங்களில் இது போன்ற குற்றங்கள் அதிக அ... மேலும் பார்க்க

பெங்களூரு: ட்ராலியில் பெண்ணின் உடல் மீட்பு; போலீசாருக்கு போன் செய்த கணவர் கைது!

பெங்களூருவில் 32 வயதுடைய பெண் கௌரி அனில் சம்ப்ரேக்கர் உடலை ட்ராலியில் கண்டெடுத்துள்ளனர் பெங்களூரு போலீசார். தென்கிழக்கு பெங்களூருவை சேர்ந்தவர் ராகேஷ் ராஜேந்திர கெடேகர். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ப... மேலும் பார்க்க