மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
சைபர் கிரிமினல்களிடம் ரூ.50 லட்சத்தை இழந்த வயதான தம்பதி தற்கொலை
இணையத்தளக் குற்றவாளிகள் பெண்கள் மற்றும் முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடம் இருக்கும் பணத்தைப் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன. அதிகமானோர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள பீடி என்ற கிராமத்தில் வசித்தவர் டையோக்ஜெரான் சாந்தன் (82). இவர் மகாராஷ்டிரா தலைமைச் செயலகத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர்.
இவரது மனைவி பிளாவியா (79). இவர்களுக்குக் குழந்தை கிடையாது. இரண்டு பேரும் தங்களது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தற்கொலைக்கு முன்பு இரண்டு பக்கத்திற்குக் கடிதம் எழுதி வைத்திருந்தனர். அக்கடிதத்தில் தங்களது இந்த முடிவுக்கு யாரும் காரணம் கிடையாது என்றும், யாரது தயவிலும் வாழ விரும்பவில்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

அனில் மற்றும் சுமித் ஆகியோர் இத்தம்பதியை ஆன்லைனில் மிரட்டி ரூ.50 லட்சத்தைப் பறித்துள்ளது அவர்களது கடிதத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
உங்கள் பெயரில் வாங்கப்பட்ட சிம்கார்டை கொண்டு சட்டவிரோத விளம்பரம் மற்றும் துன்புறுத்தலில் ஈடுபட்டு இருப்பதாகச் சாந்தனிடம் இருவரும் மிரட்டியுள்ளனர். 50 லட்சம் ரூபாயையும் கேட்டுள்ளனர்.
அதோடு சாந்தனிடம் இருக்கும் சொத்து விபரங்களைத் தெரிவிக்கும்படி கேட்டுள்ளார். அவ்வாறு கூறவில்லையெனில் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்று மிரட்டி இருக்கிறார்.
இதனால் சாந்தன் பல்வேறு வழிகளில் ரூ.50 லட்சம் திரட்டி அவர்கள் சொன்ன வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்துள்ளார். சாந்தன் தன்னிடம் இருந்த தங்க நகைகளை ரூ.7.15 லட்சத்திற்கு அடமானம் வைத்து அதனையும் அனுப்பி இருக்கிறார்.
மேலும் தனக்குத் தெரிந்த நண்பர்களிடம் கடனும் வாங்கி அனுப்பியதாகக் கடிதத்தில் சாந்தன் குறிப்பிட்டுள்ளார். அந்த அளவுக்குப் பணம் அனுப்பிய பிறகும் தொடர்ந்து பணம் கேட்டு சித்ரவதை செய்து கொண்டிருந்ததால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எங்களுக்கு யாரும் ஆதரவு இல்லை. யாரது ஆதரவிலும் வாழவும் விரும்பவில்லை. எனவேதான் இந்த முடிவை எடுத்திருக்கிறோம் என்றும், தங்களது உடலை மருத்துவப் பரிசோதனை தேவைக்குக் கொடுத்துவிடும்படியும் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களின் கடிதத்தின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவர்களின் மொபைல் போனில் இருக்கும் போன் நம்பர்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY