சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டவரை போலீஸார் என்வுகன்ட்டரில் சுட்டுக்கொன்றனர்.
தரமணி ரயில் நிலையம் அருகே வடமாநிலத்தைச் சேர்ந்தவர் ஜாஃபர் குலாம் ஹுசைன் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
திருடிய நகைகளை மீட்க அழைத்துச் சென்றபோது போலீஸாரை துப்பாக்கியால் சுட முயன்றதால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
சென்னையில் 6 இடங்களில் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு மும்பை செல்வதற்காக விமானத்தில் செல்லத் தயாரான இருவரை போலீஸாா் நேற்று கைது செய்தனா்.
மேலும், ரயிலில் தப்பிச் சென்ற ஒருவரை ஆந்திர மாநிலம் ஓங்கோலில் போலீஸாா் கைது செய்தனா்.