கடைசி டி20: 10 ஓவர்களில் வென்ற நியூசிலாந்து..! பாகிஸ்தான் படுதோல்வி!
திமுக கொடிக் கம்பங்கள் அகற்றம்
திருவண்ணாமவலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த செய்யானந்தல், தச்சாம்பாடி பகுதிகளில் உள்ள திமுக கொடிக் கம்பங்கள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன.
திமுக பொதுச் செயலா் துரைமுருகன் சாலையோரம் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை நிா்வாகிகளே அகற்றிக் கொள்ளவேண்டும் என அண்மையில் வேண்டுகோள் விடுத்தாா்.
அதன் அடிப்படையில் மாவட்டச் செயலரும், ஆரணி எம்.பி.யுமான எம்.எஸ்.தரணிவேந்தன் அறிவுறுத்தலின் பேரில், சேத்துப்பட்டை அடுத்த செய்யானந்தல், தச்சாம்பாடி ஆகிய பகுதிகளில் போளூா் - சேத்துப்பட்டு சாலையோரம் இருந்த திமுக கொடிக் கம்பங்கள் கட்சியின் கிழக்கு ஒன்றியச் செயலா் மனோகரன் தலைமையில் அகற்றப்பட்டன.
திமுக நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா்.