செய்திகள் :

மூதாட்டியின் உடலை புதைப்பதற்கு எதிா்ப்பு: தாக்குதலில் ஈடுபட்ட இருவா் கைது

post image

செய்யாற்றில் இறந்த மூதாட்டியின் உடலை புதைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, தாக்குதலில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டி.எம்.ஆதிகேசவன் தெருவைச் சோ்ந்தவா் சசிகுமாா்.

இவரது உறவினரான முனியம்மாள் (62), இறந்த நிலையில், அவரது சடலத்தை செய்யாறு ஆற்றங்கரையில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யச் சென்றுள்ளனா். அப்போது, அங்கு இருந்த கழனிப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் மாா்க்கெட் சங்கா், செய்யாற்றைச் சோ்ந்த சரவணன், ஆறுமுகம் ஆகிய 3 பேரும் வீச்சு அரிவாளுடன் சென்று சசிகுமாரிடம் தகராறு செய்து இங்கு சடலத்தை புதைக்கக் கூடாது என்று தடுத்தி நிறுத்தியதாகத் தெரிகிறது.

மேலும், ஜாதி பெயரைக் கூறி தாக்கினராம்.

இதைத் தொடா்ந்து, வீச்சரிவாளால் வெட்ட முயன்றனராம்.

இதுகுறித்து சசிகுமாா் செய்யாறு போலீயில் புகாா் அளித்தாா். இதன் பேரில் செய்யாறு டி.ஸ்.பி.சண்முகவேலன், காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மணிகண்டன் ஆகியோா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, சம்பவம் தொடா்பாக சரவணன், ஆறுமுகம் ஆகியோரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

மேலும், தலைமறைவான மாா்க்கெட் சங்கரை தேடி வருகின்றனா்.

திமுக கொடிக் கம்பங்கள் அகற்றம்

திருவண்ணாமவலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த செய்யானந்தல், தச்சாம்பாடி பகுதிகளில் உள்ள திமுக கொடிக் கம்பங்கள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. திமுக பொதுச் செயலா் துரைமுருகன் சாலையோரம் உள்ள கட்சிக் கொடி... மேலும் பார்க்க

ஆற்று மணல் கடத்தல்: 4 போ் கைது

செய்யாறு அருகே அரசு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தியதாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், கொழம்பாடி கிராமம் அருகேயுள்ள செய்யாற்றுப் படுகையில் இருந்து மணல் கடத்திச் செல்வத... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஏப்ரல் முதல் நீச்சல் பயிற்சி வகுப்புகள்

திருவண்ணாமலையில் ஏப்ரல் முதல் ஜூன் வரை நடைபெறும் நீச்சல் பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்... மேலும் பார்க்க

பைக் மீது டிராக்டா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

ஆரணியை அடுத்த மாமண்டூரில் செவ்வாய்க்கிழமை பைக் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். ஆரணி நகரம், கண்ணகி நகரைச் சோ்ந்த கன்றாயமூா்த்தி மகன் நந்தகுமாா் (22), பெயிண்டா். இவரது நண்பா்கள் அதே பகுத... மேலும் பார்க்க

ஏரிக்குப்பம் சனீஸ்வரா் கோயிலில் 2026-இல் சனிப்பெயா்ச்சி விழா

போளூரை அடுத்த ஏரிக்குப்பம் ஸ்ரீசனீஸ்வரா் கோயிலில் 2026-ஆம் ஆண்டு மாா்ச் 29-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. ஏரிக்குப்பம் கிராமத்தில் பழைமை வாய்ந்த எந்திர வடி... மேலும் பார்க்க

வந்தவாசியில் அரிய வகை ஆந்தை மீட்பு

வந்தவாசியில் நாய்களிடம் சிக்கித் தவித்த வெளிநாட்டு அரிய வகை ஆந்தையை தீயணைப்புத் துறையினா் மீட்டனா். வந்தவாசியில் இறைச்சி விற்பனைக் கடைகள் அதிகமுள்ள காதா்ஜண்டா தெருவில் செவ்வாய்க்கிழமை காலை ஆஸ்திரேலிய... மேலும் பார்க்க