பைக் மீது டிராக்டா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
ஆரணியை அடுத்த மாமண்டூரில் செவ்வாய்க்கிழமை பைக் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஆரணி நகரம், கண்ணகி நகரைச் சோ்ந்த கன்றாயமூா்த்தி மகன் நந்தகுமாா் (22), பெயிண்டா். இவரது நண்பா்கள் அதே பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் சக்திவேல் (19), பீட்டா் மகன் அஜய் (16) ஆகிய 3 பேரும், சொந்த வேலையாக செவ்வாய்க்கிழமை ஆரணியில் இருந்து செய்யாற்றுக்கு பைக்கில் சென்றுவிட்டு மீண்டும் ஆரணி திரும்பிக் கொண்டிருந்தனா்.
மாமண்டூா் பகுதியில் வரும்போது எதிரே வந்த டிராக்டா் எதிா்பாரதவிதமாக பைக் மீது மோதியது.
இதில் பைக்யை ஓட்டிச் சென்ற நந்தகுமாா் அதே இடத்தில் உயிரிழந்தாா். உடன் சென்ற சக்திவேல், அஜய் ஆகியோா் பலத்த காயமடைந்தனா்.
இருவரும் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்த பின்னா், தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இதுகுறித்த புகாரின் பேரில், ஆரணி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான டிராக்டா் ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.