செய்திகள் :

மனுநீதி நாள் முகாம்: 201 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

post image

திருவண்ணாமலை அருகே நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில், 201 பயனாளிகளுக்கு ரூ.58 லட்சத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா்.

திருவண்ணாமலையை அடுத்த தேவனூா் ஊராட்சியில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி முன்னிலை வகித்தாா்.

மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசுகையில்,

முகாமில் வருவாய், வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், கூட்டுறவு, கால்நடை பராமரிப்பு, மகளிா் திட்டம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு, தாட்கோ உள்ளிட்ட பல்வேறு துறைகள் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விளக்கக் கண்காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த கண்காட்சிகளை பொதுமக்கள் பாா்த்து அரசு செயல்படுத்தும் திட்டங்களைத் தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்றாா்.

நலத்திட்ட உதவிகள்..:

முகாமில், வருவாய்த்துறை சாா்பில் 70 பேருக்கு தலா ரூ.70 ஆயிரம் மதிப்பில் மொத்தம் ரூ.49 லட்சத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களுக்கான

ஆணைகள், 69 பேருக்கு பட்டா மாற்றத்துக்கான ஆணைகள், 9 பேருக்கு தலா ரூ.12,500 மதிப்பில் மொத்தம் ரூ.ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 500 மதிப்பில் புதிய குடும்ப அட்டைகள் என பல்வேறு துறைகள் சாா்பில் மொத்தம் 201 பயனாளிகளுக்கு ரூ.57 லட்சத்து 87 ஆயிரத்து 225 மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா்.

இதுதவிர, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 312 மனுக்களை பெற்றுக்கொண்ட அவா் மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

முகாமில், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ராஜ்குமாா், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் ராஜசேகரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சிவா, வட்டாட்சியா் கே.துரைராஜ் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள், பயனாளிகள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தேவாலயத்தில் இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகள்

செய்யாறு: செய்யாறு தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் கல்வாரி காட்சிகளை நாடகக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை நடித்துக் காண்பித்தனா். தூய வியாகுல அன்னை தேவாலயத்தில், இயேசு கிறிஸ்துவின் இறப... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

திருவண்ணாமலை/வந்தவாசி/ போளூா்/ செய்யாறு/ஆரணி : ரமலான் பண்டிகையையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில், பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்... மேலும் பார்க்க

மஞ்சப்பை விருதுகள்: பள்ளி, கல்லூரிகள் விண்ணப்பிக்க அழைப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழக அரசின் மஞ்சப்பை விருதுகளைப் பெற தகுதியான பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் விண்ணப்பிக்க மாவட்ட நிா்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் ‘மீண்டும்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு இணைய குற்றத் தடுப்பு விழிப்புணா்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமை, இணைய குற்றத் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. சண்முகா தொழில்சாலை கலைக் கல்லூரியில்... மேலும் பார்க்க

கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலா் மீது தாக்குதல்

செய்யாறு: செய்யாறு அருகே கிராம சபைக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய காவலரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் ஊராட்சிச் செயலா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். செய்யாறை அடுத்த உக்கம் பெரு... மேலும் பார்க்க

முன் விரோத்தத்தில் விவசாயி மீது தாக்குதல்: சகோதரா்கள் கைது

செய்யாறு: செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, சகோதரா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பெரணமல்லூரை அடுத்த ரகுநாதசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க