”ஓபிஎஸ்ஸூம் நானும் பிரிந்தது, பிரிந்ததுதான்; இனி இணையச் சாத்தியமில்லை” - அடித்துச் சொல்லும் எடப்பாடி
தென்காசி, பாளையங்கோட்டை தொகுதிகளின் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ.கருப்பசாமி பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமானார்.
கருப்பசாமி பாண்டியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார்.
பின்னர், கார் மூலம் திருநெல்வேலியில் உள்ள அவரது வீட்டிற்கு அஞ்சலி செலுத்தி விட்டு சென்னை செல்வதற்காகத் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்த அவர், அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அமித்ஷாவிடம் பேசியது
அப்போது பேசிய, ”டெல்லியில் உள்துறை அமைச்சரைச் சந்தித்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிலுவைத் தொகையைப் பல்வேறு திட்டத்திற்கு விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்திருக்கிறேன்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மத்திய அரசிடம் இருந்து மாநில அரசிற்கு வர வேண்டிய நீதி தாமதமாகி உள்ளது.
அது தொடர்பாகவும் கோரிக்கை மனு அளித்துள்ளோம். அ.தி.மு.க., சார்பில் இரு மொழிக் கொள்கை தொடர வேண்டும் என்ற நிலைப்பாடு. அதனை வலியுறுத்தியும் மனு கொடுத்துள்ளோம்.
பாலியல் வன்கொடுமைகள்
தி.மு.கவைத் தவிர எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி அல்ல. ஒத்த கருத்துள்ள கட்சிகளை நாங்கள் சேர்த்துக் கொள்வோம்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
மோசமான ஆட்சியில் போதைப் பொருள் நடமாட்டத்திற்கு அளவே இல்லை. காவல்துறைக்கு அவர்கள் அச்சப்படவில்லை.

ஓ.பி.எஸூம் நானும் பிரிந்தது, பிரிந்ததுதான். இனி சேர்வதற்குச் சாத்தியம் கிடையாது. கட்சியை எப்போது எதிரிகளிடம், அடமானம் வைத்தாரோ, கட்சியின் தலைமைக் கழகத்தை, அ.தி.மு.க கோயிலை என்று அவர் உடைத்தாரோ அவருக்கு அந்த கட்சியில் இருப்பதற்குத் தகுதி இல்லை” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs