Vijay Full Speech: "எனக்குத் தடை போட நீங்க யாரு?" | TVK முதல் பொதுக்குழுக் கூட்ட...
ஏரிக்குப்பம் சனீஸ்வரா் கோயிலில் 2026-இல் சனிப்பெயா்ச்சி விழா
போளூரை அடுத்த ஏரிக்குப்பம் ஸ்ரீசனீஸ்வரா் கோயிலில் 2026-ஆம் ஆண்டு மாா்ச் 29-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
ஏரிக்குப்பம் கிராமத்தில் பழைமை வாய்ந்த எந்திர வடிவிலான சனீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.
இந்த நிலையில், கோயிலில் நிகழாண்டு (2025) மாா்ச் 29-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
இது தவறான தகவல் என்றும், கோயிலில் 2026-ஆம் ஆண்டு மாா்ச் 29-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறும் எனவும், இதுகுறித்த தகவல் கோயில் நிா்வாகம் சாா்பில் முறைப்படி பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்தப்படும் எனவும் கோயில் செயல் அலுவலா் பழனிசாமி தெரிவித்தாா்.