செய்திகள் :

Manoj Bharathiraja: "என் மனதைப் பெரிதும் பாதிக்கிறது" - டி ராஜேந்தர் வேதனை

post image

புகழ்பெற்ற இயக்குநர் பாரதி ராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா (48) மறைந்துள்ள செய்தி திரையுலகினர் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு இதய சிகிச்சை மேற்கொண்ட அவர் இன்று மாலை அவருடைய இல்லத்தில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார். 

மனோஜ் பாரதிராஜாவின் உடல் இன்று இரவு முதல் நாளை மாலை 3 மணி வரை நீலாங்கரை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

மனோஜ் பாரதிராஜா

அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் டி.ராஜேந்தர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

அவரது செய்திக்குறிப்பில் , "இயக்குநர் இமயம், மண்வாசனை இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனார் மனோஜ் அவர்கள் மாரடைப்பால் மறைந்து விட்டார் என்ற செய்தி என் மனதை பெரிதும் பாதிக்கிறது.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தமிழக ரசிகப் பெருமக்களுக்கும் என்னுடைய ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.

மனோஜ் பாரதிராஜா

பாரதிராஜா இயக்கிய `தாஜ் மஹால்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. அப்படத்திற்குப் பிறகு `சமுத்திரம்' திரைப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெரிதளவில் பரிச்சயமான அவர் தொடர்ந்து சில திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இவர் கடைசியாக கடந்தாண்டு வெளியான `ஸ்நேக் அன்ட் லாடர்ஸ்' வெப் சீரிஸில் நடித்திருந்தார்.

உதவி இயக்குநராக அனுபவம் கொண்ட இவர் `மார்கழி திங்கள்' என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குநராகவும் பரிச்சயமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Cinema Business: படத்தின் திரையரங்க ரிலீஸுக்கு முன்பே எப்படி லாபம் கிடைக்கும்? | Depth

சினிமாவில் லாபக்கணக்குசினிமாவில் லாபக்கணக்கு திரையரங்க வசூலை வைத்து மட்டும் தயாரிப்பாளர்கள் கணக்கிடமாட்டார்கள். அந்த லாபக்கணக்கில் பல்வேறு விஷயங்கள் அடங்கியிருக்கிறது. இதில் ரிலீஸுக்கு முந்தைய ப்ரீ ரி... மேலும் பார்க்க

Manoj Bharathiraja: "இதைக் கடந்துவர இறைவன் வலிமையை வழங்கட்டும்" - பாரதிராஜாவுக்கு அண்ணாமலை ஆறுதல்

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா மறைவுக்குத் திரையுலகினரும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.48 வயதான அவர் சில நாட்களுக்கு முன்பு இதய சிகிச்சை மேற்கொண்டுள்ளார... மேலும் பார்க்க

Manoj Bharathiraja: "சீக்கிரமாகப் போய்விட்டீர்கள் சகோ" - இயக்குநர் வெங்கட் பிரபு இரங்கல்

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா மறைவுக்குத் திரையுலகினரும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.48 வயதான இவர் சில நாட்களுக்கு முன்பு இருதய சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்நிலை... மேலும் பார்க்க

Manoj Bharathiraja: மனோஜ் பாரதிராஜா மறைவு; இறுதிச் சடங்கு எங்கே, எப்போது?

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா நேற்று (25.03.2025) காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மனோஜ் பாரதிராஜா சில நாட்களுக்... மேலும் பார்க்க

Manoj Bharathiraja: அப்பாவின் ஆசை; ஷங்கரின் துணை இயக்குநர்; மனோஜின் 26 வருட சினிமா பயணம்

இயக்குநர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா (48) இன்று (மார்ச் 25) மாரடைப்பினால் காலமானார். அவரின் வாழ்க்கை குறித்து ஒரு பார்வை: 1976 ஆம் ஆண்டு பிறந்த இவர் தன் தந்தையின் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வ... மேலும் பார்க்க

Manoj Bharathiraja: "அருமை மகனை இழந்து வாடும் பாரதிராஜாவுக்கு..." - கமல்ஹாசன் இரங்கல்

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜாவின் மறைவு தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இதய சிகிச்சை மேற்கொண்ட அவர் இன்று மாலை அவருடைய இல்லத்த... மேலும் பார்க்க