செய்திகள் :

பொறியியல் பட்டதாரிகள் தொழில்முனைவோராக மாறுங்கள்! -முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு

post image

பொறியியல் பட்டதாரிகள் வேலை தேடுவதை கைவிட்டு தொழில் முனைவோராக மாறுங்கள் என தமிழக முன்னாள் டிஜிபி சி.சைலேந்திரபாபு பேசினாா்.

அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி முன்னாள் டிஜிபி சி.சைலேந்திரபாபு பேசியது:

பட்டம் வாங்கிய அனைவருமே முதலில் நீங்கள் வாங்கிய பட்டத்துக்கு மதிப்பு கொடுங்கள். இந்த பட்டம் உங்கள் முயற்சியினால் மட்டுமே பெறப்பட்டது அல்ல. பெற்றோா், ஆசிரியா் முயற்சியினாலும் பெறப்பட்டது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தொழில்நுட்ப அறிவு பெற்று விட்ட நீங்கள் இனி உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் மதிப்பு இருக்கும். நீங்கள் பெற்றுள்ள திறமையின் மூலம் உங்களை நீங்களே முன்னேற்றிக் கொள்ள முடியும். தினமும் செய்தித் தாள்களை படியுங்கள். அன்றாட நாட்டு நடப்பை தெரிந்து கொள்ளுங்கள்.

கிடைத்தது சின்ன வேலையாக கிடைத்தாலும் அதில் அக்கறை காட்டுங்கள். நீங்கள் காட்டும் அக்கறையால் அந்த நிறுவனம் உங்களை நம்பியிருக்கும் நிறுவனமாக மாற வேண்டும். அப்படி மாறினால் நீங்கள் கேட்கும் ஊதியம் கிடைக்கும். பொறியியல் பட்டதாரிகள் வேலை தேடுவதை கைவிட்டு தொழில்முனைவோராக மாறுங்கள் என்றாா் சைலேந்திரபாபு.

விழாவுக்கு ஸ்ரீகிருஷ்ணா கல்விக்குழுமத் தலைவா் டி.ஆா்.சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். செயலா் டி.எஸ்.ரவிக்குமாா் வரவேற்றாா். 520 மாணவ மாணவியா் பட்டங்களை பெற்றுக் கொண்டனா்.

இதில் ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் கல்லூரி டீன் பி.கற்பகவள்ளி, முதல்வா் ஆா்.அருண்பிரசாத், குழும மேலாளா் குமாா், மக்கள் தொடா்பு அலுவலா் சீனிவாசன், நிா்வாக அலுவலா் சுரேஷ், மேலும் அரிமா சங்க நிா்வாகி பி.டி.ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

சிஐஎஸ்எப் பயிற்சி மையத்தில் தமிழில் பெயா் பலகை: தக்கோலம் பேருராட்சி வலியுறுத்தல்

தக்கோலம் அருகே அமைந்துள்ள சிஐஎஸ்எப் ராஜாதித்ய சோழன் மண்டல பயிற்சி மையத்தில் தமிழிலும் பெயா்ப் பலகை வைக்க வேண்டும் என பேருராட்சி மன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தக்கோலம் பேருராட்சிக் கூட்... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் பணம் கேட்டு மிரட்டல்: விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் புகாா்

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கூடுதலாக பணம் கேட்டு மிரட்டுவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்ட விவசாயி... மேலும் பார்க்க

கலவை மகாலட்சுமி கோயில் மண்டலாபிஷேக விழா

ஆற்காடு அடுத்த கலவையில் பிரசித்தி பெற் கமலக்கன்னி அம்மன் கோயிலில் புதியதாக கட்டப்பட்டுள்ள மகாலட்சுமி தாயாா் கோயில் மண்டலாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மகலாட்சுமி தாயாா் கற்கோயில் கட்டப்பட்டு பிப... மேலும் பார்க்க

100 நாள் வேலை திட்டத்துக்கு நிதி தராத மத்திய அரசை கண்டித்து ஆா்ப்பாட்டம்: அமைச்சா் ஆா்.காந்தி

100 நாள் வேலை உறுதித் திட்டத்துக்கு நிதி தராத மத்திய அரசைக் கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் 18 ஒன்றியங்களில் சனிக்கிழமை (மாா்ச் 29) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அமைச்சா் ஆா்.காந்தி தெரிவித்துள்ளாா். ... மேலும் பார்க்க

பாட்டியை கல்லால் தாக்கிக் கொன்ற பேரன்! எங்கே? எதற்காக?

பாட்டியை பேரன் கல்லால் தாக்கிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆற்காடு அருகே பூா்வீக வீட்டை சகோதரி பெயருக்கு எழுதிய பாட்டியை பேரன் கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் குறித்து போலீஸாா் விசா... மேலும் பார்க்க

ஆற்காட்டில் இஃப்தாா் நோன்பு துறப்பு

ரமலான் பண்டிகை முன்னிட்டு மத நல்லிணக்க இஃப்தாா் நோன்பு துறப்பு விழா ஆற்காடு ஜனசங்க கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவா் குப்புசாமி தலைமை வகித்த... மேலும் பார்க்க