திரையரங்கில் துரத்திய ரசிகர்கள்..! ஆட்டோவில் தப்பிச்சென்ற விக்ரம்!
நடிகர் விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படம் நேற்று (மார்ச்.27) மாலை தாமதமாக வெளியானது.
சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர்கள் எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முழுநீள ஆக்ஷன் திரைப்படமான இது ஒரே நாள் இரவில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது.
இரண்டு பாகங்களாக வெளியாகும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தைதான் முதலில் வெளியிட்டுள்ளார்கள்.
படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு பி4யு என்ற நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்காக ஓடிடி உரிமத்தை பி4யு நிறுவனத்துக்கு தயாரிப்பாளர் எழுதிக் கொடுத்துள்ளார்.
ஓடிடி குறித்த அறிவிப்பின்மையினால் வழக்கு தொடரப்பட்டு பின்னர் சமரசமாகியதால் திரைப்படம் தாமதாக வெளியானது.
இரவு சென்னையிலுள்ள சத்யம் திரையரங்கில் நடிகர் விக்ரம் படம் பார்க்க சென்றார். அங்கு நடிகர் சிவகார்த்திகேயனும் வந்திருந்தார்.
விக்ரமைப் பார்க்க ரசிகர்கள் வேகமாக குழுமினர். ரசிகர்களின் கூட்டத்தில் இருந்து நடிகர் விக்ரம் தப்பிக்க ஆட்டோவில் ஏறிச் சென்றார்.
இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
#ChiyaanVikram being showered with love by fans at Sathyam! From arriving in a car to leaving in an auto, The response for #VeeraDheeraSooran is massive and heartwarming! @chiyaanpic.twitter.com/qi8b43sjTl
— Yuvraaj (@proyuvraaj) March 28, 2025