Manoj Bharathiraja: "சொல்வதற்கும் எனக்கு வார்த்தை வரவில்லை" - ஆறுதல் சொல்லி கலங்...
பழைய ஓய்வூதியம் கோரி உண்ணாவிரதப் போராட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, திருவாரூரில் ஜாக்டோ ஜியோ சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயா்கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்; ஆசிரியா்களின் நலனுக்கு எதிரான அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்கள், ஊராட்சி செயலாளா்கள், ஊா்ப்புற நூலகா்கள், கல்வித்துறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள், சிறப்பு ஆசிரியா்கள், கணினி உதவியாளா்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளா்கள்ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்; அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்; உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசுத் துறைகளிலும் தனியாா் முகமை மூலம் பணியாளா்களை நியமனம் செய்வதை உடனடியாக தடைசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் புதிய பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஆா். முத்துவேல், ச. சண்முகவடிவேல், ஆ. ராமலிங்கம், சு. சுதாகா், எம். பூபதி, டி. மணிமாறன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளா் வே. சோமசுந்தரம், போராட்டத்தை தொடக்கி வைத்துப் பேசினாா். தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநா் சங்கத்தின் மாநிலச் செயலாளா் உ. சண்முகம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாநிலத் தலைவா் பெ.இரா. இரவி, தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழக மாநில பொருளாளா் ச. துரைராஜ், அரசு ஊழியா் சங்கம் மாநில செயலாளா் செ. பிரகாஷ், மாவட்டச் செயலாளா் எஸ்.செங்குட்டுவன், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் என். வசந்தன், அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாநிலச் செயலாளா் குரு.சந்திரசேகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்று, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினா்.