Manoj Bharathiraja: "என் மனதைப் பெரிதும் பாதிக்கிறது" - டி ராஜேந்தர் வேதனை
மன்னாா்குடியில் அதிமுக முன்னாள் அமைச்சா் உறவினா் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் சகோதரா் மகன் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா்.
கரைக்காலில் புதுவை பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளா், காரைக்கால் செயற்பொறியாளா் உள்ளிட்ட சிலரிடம் சிபிஐ அதிகாரிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விசாரணை செய்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பொறியாளா்கள் இரண்டு போ், மன்னாா்குடியை சோ்ந்த தனியாா் கட்டட ஒப்பந்ததாரா் என். இளமுருகன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனா்.
இதற்கிடையே, மன்னாா்குடி பூக்கொல்லை சாலையில் உள்ள ஒப்பந்ததாரா் இளமுருகன் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை வந்த சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனா். இளமுருகன் அதிமுக முன்னாள் அமைச்சரும், திருவாரூா் மாவட்டச் செயலாளருமான ஆா். காமராஜின் சகோதரா் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.