கணினி முன் அமர்ந்து வேலை செய்பவரா? முதுகெலும்பு பிரச்னை வராமல் தடுப்பது எப்படி?
திமுக நடத்தும் அநாகரிக அரசியலுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவாா்கள்: பாஜக
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, அண்ணாமலைக்கு எதிராக திமுக நடத்தும் அநாகரிய அரசியலுக்கு தமிழக மக்கள் பாடம் புகட்டுவாா்கள் என தமிழக பாஜக செய்தி தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுகவினரின் அநாகரிக அரசியலுக்கும், ஆபாச சிந்தனைக்கும், மக்கள் விரோத திமுக ஆட்சிக்கும் தமிழக கழிவறைகளில் திமுக வினரால் ஒட்டப்பட்டுள்ள மோடி, அண்ணாமலை படம் முற்றுப்புள்ளிவைக்கும். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் திமுக அரசின் ஊழலுக்கும் பிரிவினைவாதம் அரசியலுக்கு முடிவுரை எழுதும்.
தமிழகத்தில் நடந்த ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழலை அமலாக்கத்துறை அம்பலப்படுத்தியதை தொடர்ந்து தமிழகம் முழுக்க ஜனநாயக வழியில் பாஜகவினர் நடத்திய போராட்டத்தை திமுக அரசு காவல்துறையை கொண்டு, சட்டத்திற்கு புறம்பாக பல்வேறு அராஜக வழியில், அடக்க முயற்சித்து தோற்றுவிட்டது.
திமுக ஆட்சியின் அவலங்களை தட்டி கேட்டு, டாஸ்மாக் ஊழலை தட்டி கேட்ட பாஜகவினரை, கொடுமைப்படுத்தும் காவல்துறையை கண்டித்து, காவல்துறையின் பொறுப்பு அமைச்சராக உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து, காவல்துறையின் மிரட்டலுக்கு பயப்படாமல்
கடந்த ஒரு வார காலமாக பாஜக மகளிர் அணியினர் டாஸ்மாக் கடைகளின் முன்பு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து போராடி வருகின்றனா்.
இதில் இதுவரை தமிழக முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட வழக்குகளை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். பாஜக மகளிர் அணியைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஏறத்தாழ 200 பேர் போராட்ட களத்தில் கைது செய்யப்பட்டு பெயிலில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்: விஜய்
திமுக அரசு எத்தனை அடக்குமுறை செய்தாலும், காவல்துறை மூலம் மிரட்டல் விடுத்தாலும், தேடுதல் வேட்டை நடத்தினாலும், கைது செய்தாலும் அஞ்சாமல் போராடி, தீய சக்தி திமுக ஆட்சிக்கு முடிவு கட்டிய தீருவோம், மக்கள் விரோத ஊழல் திமுக கட்சியை தமிழகத்தில் இருந்து விரட்டி அடிப்போம் என்ற உறுதியுடன் பாஜக மகளிர் அணியினர் போராட்டத்தை தொடர்ந்து துணிவுடன் நடத்தி வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின், ஊழல் செய்பவர்களை காக்கும் அரசாக, கொலை கொள்ளை செய்பவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அரசாக, போதை வியாபாரிகளின் சந்தையாக தமிழகம் மாறியதை பற்றி கவலைப்படாமல், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து பெண்கள் தொடர் பாலியல் திட்டங்களால் பாதிக்கப்படுவதை தடுக்காமல், ஊழலை தட்டி கேட்கும் பாஜக மகளிர் அணி நிர்வாகிகளை ஆயிர கணக்கில் விரட்டி விரட்டி கைது செய்வது தான் ஜனநாயகமா?
தமிழகத்திற்கு பல லட்சம் கோடி திட்டங்களை அளித்து தமிழகத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும் பிரதமர் மோடி, மக்களின் உரிமைகளுக்காக பாடுபட்டு அரசியல் சேவை செய்யும் அண்ணாமலை புகைப்படத்தை ஆண்கள் கழிவறையில் ஒட்டி கேவலப்படுத்துவது தான் அண்ணா உங்களுக்கு கற்றுக் கொடுத்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அரசியலா?
வெகு விரைவில் சென்னை மாநகராட்சி கழிவறை காண்ட்ராக்ட் ஊழல் வெளிச்சத்திற்கு வரவுள்ளது. வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அரசின் ஊழலுக்கும் பிரிவினைவாதம் அரசியலுக்கு முடிவுரை எழுதி தமிழக மக்கள் பாடம் புகட்டுவாா்கள் என கூறியுள்ளார்.