செய்திகள் :

திருப்பத்தூர்: 24 மணி நேரமும் திக்... திக்; அபாய சாலை... அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்!

post image

திருப்பத்துாரில் இருந்து பெரிய ஏரி வழியாக திருமால் நகர், மிட்டூர், ஆண்டியப்பனுார், ஆலங்காயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குப் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் அரசு மற்றும் தனியார்த் துறை ஊழியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், வியாபாரிகள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். அதனால் அந்த சாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.

இந்நிலையில், பெரிய ஏரியிலிருந்து திருமால் நகர் டாஸ்மாக் கடை வரை செல்லும் சாலையின் இரு புறங்களிலும் எந்தவித தடுப்பு கம்பிகளோ, சுவர்களோ கட்டப்படாமல் ஆபத்தாகக் காட்சி அளிக்கிறது.

குறிப்பாக சாலை வளையும் இடத்தில் மிகவும் கோணலாக உள்ளதால், சில நேரங்களில் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து ஏரியின் அந்த பக்கம் விழுந்து, விபத்துக்குள்ளாகின்றன. அதனால் திருப்பத்துாரில் இருந்து செல்லும்போது சாலையின் இடது புறத்தில் ஏரி நீரிலும், வலது புறத்தில் 30 அடி ஆழம் உள்ள பள்ளத்திலும் எங்குத் தவறி விழுந்து விடுவோமோ என்று பயந்து பயந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் பொதுமக்கள் தினமும் பயணம் மேற்கொள்ளும் நிலை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

அந்தச் சாலை வழியாக வாகனங்களில் செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட அனைவரும் திக், திக் மன நிலையிலேயே பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சாலையின் இரு புறங்களிலும் தடுப்புகள் இல்லாததால் திருப்பத்தூரிலிருந்து மேற்கண்ட பகுதிகளுக்கு வந்து செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வெங்களாபுரம், மாடப்பள்ளி வழியாக 6 கி.மீ. வழியாகச் சுற்றிச்செல்கிறது. ஏரி இருப்பதால் அந்த வழியாகப் பேருந்துகள் இயக்கப்படா விட்டாலும் அந்த வழியாகச் செல்லும் டூவீலர், கார், லாரி உள்ளிட்ட வாகன ஓட்டிகளின் நலன் கருதித் தடுப்பு கம்பிகள் அமைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நகராட்சி அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, ``நாங்களும் இது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் பேசியுள்ளோம். விரைந்து தடுப்பு கம்பிகள் அமைக்க ஏற்பாடு செய்கிறோம்" என்றனர்.

நமக்குள்ளே... - அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் ‘கொடூர’ தீர்ப்பு

சில நீதிபதிகளின் அறம் பிறழ்ந்த தீர்ப்புகள், சட்டத்தின் மீதும், நீதிமன்றங்களின் மீதும் மக்களை நம்பிக்கை இழக்கச் செய்வதுடன், ரௌத்திரம் கொள்ளச் செய்கின்றன. சமீபத்திய அதிர்ச்சி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

Kerala: ``நாட்டுக்காக தியாகம் செய்தவர்தான் சாவர்க்கர்..'' - SFI பேனரால் ஆவேசமான கேரள கவர்னர்

கேரள மாநிலத்தில் இப்போதைய கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும், ஆளும் சி.பி.எம் அரசும் இணக்கமாக உள்ளது. கடந்த வாரத்தில் டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை, கேரள கவர்னர் மற்றும் முதல... மேலும் பார்க்க

2.4 மில்லியன் டிஜிட்டல் நிதி மோசடிகள்; பறிபோன ரூ.4,245 கோடி! - RBI நடவடிக்கை என்ன?

2024-25 நடப்பு நிதியாண்டின் முதல் 10 மாதங்களில், 2.4 மில்லியன் டிஜிட்டல் நிதி மோசடி சம்பவங்கள் பதிவாகி உள்ளன. ரூ.4,245 கோடி பறிபோய் உள்ளது. கடந்த 2023-24-ம் ஆண்டில், 2.8 மில்லியன் வழக்குகளில் ரூ. 4,40... மேலும் பார்க்க

``உங்களுக்கு ஏளனமாக உள்ளதா?'' - நிதிப் பகிர்வு குறித்து நிர்மலா பேச்சுக்கு கனிமொழி கண்டனம்

'கொஞ்சம் ஏளனமாக சொல்ல வேண்டுமானால், தமிழ்நாட்டிற்கு சென்னையும், கோவையும் தான் அதிக வரி கொடுக்கின்றது. அரியலூர் மற்றும் கோவில்பட்டியில் இருப்பவர்கள் எங்களுக்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால், சென்னை... மேலும் பார்க்க

``சென்னையும், கோவையும் `இப்படி' கேட்டால் என்ன செய்வது?'' - நிர்மலா சீதாராமன் சொல்வது என்ன?

சென்னையில் நேற்று மத்திய பட்ஜெட் குறித்த நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்படும் வரிகள் குறித்து பேசினார். அதில்,"தமிழ்நாட்டில்,... மேலும் பார்க்க

``அந்த அறையில் பணம் வைத்ததே இல்லை!'' - தன் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பணம் குறித்து நீதிபதி பதில்

கடந்த வாரம், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. அவர் அந்த நேரத்தில் வீட்டில் இல்லை. இதனால், தீயணைப்பு துறையின் உதவியை நாடியுள்ளது அவரது குடும்பம். தீயணைப்பு முட... மேலும் பார்க்க