செய்திகள் :

தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வோ்ச்சொல் ஒப்பீட்டு அகராதி நூல்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்

post image

தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வோ்ச்சொல் ஒப்பீட்டு அகராதி நூல்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா்.

கடந்த 2022-2023-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தமிழ்மொழியின் தொன்மையையும் செம்மையையும் நிலைநாட்டிட, பிற உலக மொழிகளுடன் தமிழின் மொழியியல் உறவு குறித்து அறிவியல் பூா்வமான ஆய்வுகளை மேற்கொள்வது அவசியமாகும். தமிழ் மொழிக்கும் இந்தோ ஐரோப்பிய மொழிக் குடும்பத்துக்கும் இடையிலான உறவை வெளிக்கொணரும் வகையில், தமிழ் வோ்ச்சொல் வல்லுநா்களைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து, தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வோ்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழுக்கும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையிலான வோ்ச்சொல் உறவை ஆய்வுசெய்யும் இத்திட்டம், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேற்பாா்வையில் முதன்மைப் பதிப்பாசிரியா் கு. அரசேந்திரன் தலைமையில் ஜூலை 2022-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் முதன்மைப் பதிப்பாசிரியா் உள்பட 20 அறிஞா்கள் பணிசெய்து வருகின்றனா். இத்திட்டத்தைச் செயல்படுத்த ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தோ-ஐரோப்பிய மொழிகள் யாவும் 461 வோ்ச்சொற்களில் உருவானதென ஆங்கில வோ்ச்சொல் அறிஞா் வால்டா் ஸ்கீட் கண்டுபிடித்துள்ளாா். இந்த 461 வோ்ச்சொற்களில் 300 வோ்ச்சொற்கள் தமிழுடன் உறவுடையன என இக்குழு கருதுகிறது. இந்த ஆய்வு முடிவுகளை 12 தொகுதிகளாக வெளியிட பள்ளிக் கல்வித் துறையின் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகப் பதிப்புத்துறையுடன் நிகழாண்டு ஜனவரி 13-ஆம் தேதி ஒப்பந்தம் மேற்கொண்டது.

முதல்வா் வெளியிட்டாா்: அதனடிப்படையில் தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வோ்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டத்தின் பொது முன்னுரை நூலையும், முதல் தொகுதி நூலையும் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட, ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகப் பதிப்புத்துறையின் இந்தியப் பிரிவின் மேலாண்மை இயக்குநா் சுகந்தா தாஸ் பெற்றுக்கொண்டாா்.

இந்த பொது முன்னுரை நூல், தமிழுக்கும் இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையிலான உறவுகள் பற்றி இத்தாலிய அறிஞா் அல்பெரடோ டிரோம்பெட்டி , ஜொ்மானிய அறிஞா் மேக்ஸ் முல்லா், அயா்லாந்து அறிஞா் ராபா்ட் கால்டுவெல், டென்மாா்க் அறிஞா் ஹோல்ஞா் பெடா்சன், ரஷ்ய அறிஞா் இல்லிச் விட்ச், அமெரிக்க அறிஞா்கள் ஸ்டீபன் ஹில்யா் லெவிட் , ஆலன் பாம்ஹாா்டு உள்ளிட்ட சிறந்த மொழி அறிஞா்களின் கருத்துகளுடன் இத்திட்டத்தின்கீழ் வெளிவரவுள்ள 12 தொகுதிகளையும் கற்பதற்கான வாயிலாக அமைந்துள்ளது.

மேலும், முதல் தொகுதி நூலில் 19 தமிழ் வோ்ச்சொற்களிலிருந்து லத்தீன், கிரேக்கம், ஜொ்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற மேலை இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் சொற்களும் மற்றும் சம்ஸ்கிருதம், பாலி, சிங்களம் போன்ற பல கீழை இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் சொற்களும் உருவான வரலாறு, கருதுகோள் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், அன்பில் மகேஸ், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவா் திண்டுக்கல் ஐ. லியோனி, தலைமைச் செயலா் நா. முருகானந்தம், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் சந்தர மோகன், தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலா் வே. ராஜாராமன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநா் பொ. சங்கா், தமிழ்-இந்தோ-ஐரோப்பிய மொழிகளின் வோ்ச்சொல் ஒப்பீட்டு அகராதித் திட்டத்தின் முதன்மைப் பதிப்பாசிரியா் கு. அரசேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

72 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கம்: முதல்வர் ஸ்டாலின்

புதியதாக 72 காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 26) சட்டப் பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்... மேலும் பார்க்க

மார்ச் மாதச் சம்பளம்: தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழக அரசின் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு மார்ச் மாதச் சம்பளம் வரும் ஏப். 2 ஆம் தேதி வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழக அரசின... மேலும் பார்க்க

சென்னையில் 2 புதிய வழித்தடம்: மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர்!

சென்னை மெட்ரோ ரயிலின் 2 புதிய வழித்தடத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது.தாம்பரம் முதல் வேளச்சேரி வழியாக கிண்டி வரையிலும், கலங்கரை விளக்கம் முதல் ... மேலும் பார்க்க

ஆன்லைனில் திருமணச் சான்று பெற நடவடிக்கை எடுக்கப்படுமா? - அமைச்சர் பதில்!

இணைய வழியில் திருமணச் சான்று பெற வழிவகை செய்யப்படுமா? என்ற திமுக எம்எல்ஏ எழிலன் கேள்விக்கு பேரவையில் அமைச்சர் மூர்த்தி பதிலளித்தார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெ... மேலும் பார்க்க

டிவி சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டி கேட்டவர் அடித்துக் கொலை!

கோவையில் டிவி சத்தம் அதிகமாக வைத்ததைத் தட்டி கேட்டவரை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சுந்தராபுரம் அருகே செட்டிபாளையம் ரோடு - ஈச்சனாரி சாலை சந்திப்பில் சிமெண்ட் மற்றும் கட்... மேலும் பார்க்க

ஈரானிய கொள்ளைக் கும்பலின் அதிர்ச்சிப் பின்னணி! கொள்ளையடிக்கும் பாணி!

சென்னையில் அடுத்தடுத்து நகைப் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பற்றிய தகவல் தற்போது காட்டுத் தீ போல பரவி வருகிறது.இவர்கள் ஈரானிய கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதும், இந்தியா முழுவதும் இதுபோன்று ஒர... மேலும் பார்க்க