Empuraan: "நம்ம பட நிகழ்ச்சிக்கு பிரதீப் ரங்கநாதன் ஆங்கர் பண்றாரான்னு..." - ப்ரி...
``சென்னையும், கோவையும் `இப்படி' கேட்டால் என்ன செய்வது?'' - நிர்மலா சீதாராமன் சொல்வது என்ன?
சென்னையில் நேற்று மத்திய பட்ஜெட் குறித்த நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அதில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்படும் வரிகள் குறித்து பேசினார். அதில்,
"தமிழ்நாட்டில், 'நாங்க தான் அதிக வரி கொடுக்குறோம். நாங்க கொடுக்குற ஒரு ரூபாயில 7 பைசாக்கூட எங்களுக்கு நீங்க திருப்பி தர்றதில்லை' என்ற குரல்கள் எங்கிருந்து வருகின்றன என்று தெரியவில்லை. சாலை, ரயில்வே போன்ற கட்டமைப்பு வசதிகளுக்கு மத்திய அரசு பணம் கொடுக்கிறது.

அரியலூர், கோவில்பட்டி...
நாட்டில் உள்ள 25 சதவகித எலக்ட்ரானிக் உற்பத்தி தொழிற்சாலைகள் இங்கு தான் இருக்கின்றன. வரி குறித்து கொஞ்சம் ஏளனமாக சொல்ல வேண்டுமானால், தமிழ்நாட்டிற்கு சென்னையும், கோவையும் தான் அதிக வரி கொடுக்கின்றது. அரியலூர் மற்றும் கோவில்பட்டியில் இருப்பவர்கள் எங்களுக்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால், சென்னையும், கோவையும், 'நாங்க தான் பணம் கொடுக்குறோம். அதனால, எங்களுக்கு பணம் திருப்பி கொடுங்க. அங்கே செலவு செய்யாதீர்கள்' என்று சொல்ல வேண்டும். ஆனால், இந்தியாவில் அந்த மாதிரியான பாலிசிகள் இல்லை" என்று பேசியுள்ளார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
