மோகன்லாலின் எம்புரான் முதல் காட்சியைக் கண்டுகளிக்க கல்லூரிக்கு விடுமுறை - எங்கே?
மோகன்லால் முதன்மைக் கதாபாத்திரமேற்று நடித்துள்ள எம்புரான் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை மாணவர்கள் கண்டுகளிப்பதற்காக கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி நிர்வாகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. அக்கல்லூரியின் முதல்வர், நடிகர் மோகன்லால் மீது மிகுந்த அபிமானம் கொண்டவராவார்.
இந்த நிலையில், அக்கல்லூரி நிர்வாகம் தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘லைட்ஸ், கேமரா, ஹாலி-டே!” என்று அறிவித்து மாணவர்களுக்கு மார்ச் 27-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்ல, பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரிலுள்ள ஒரு திரையரங்கில் மார்ச் 27-ஆம் தேதி காலை 7 மணி காட்சியை மாணவர்களுக்காக முன்பதிவு செய்தும் கொடுத்துள்ளது கல்லூரி நிர்வாகம்.