கலக்குறீங்க சகோ..! பிரதீப் ரங்கநாதனுக்கு விஜய் வாழ்த்து
நடிகர் விஜய்யை இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் சந்தித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிதாகதொரு அரசியல் கட்சியை தோற்றுவித்துள்ள விஜய் தமது கடைசி திரைப்படமாக அமையவுள்ள ‘ஜன நாயகன்’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அவரை இன்று(மார்ச் 24) ‘டிராகன்’ திரைப்படக் குழுவினர் சந்தித்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரையும் விஜய் வெகுவாகப் பாராட்டியுள்ள நிலையில், அப்படத்தின் கதாநாயகனான பிரதீப், விஜய்யுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தமது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, ரசிகர்களிடம் தான் மிகுந்த ஆனந்தமடைந்திருப்பதாகப் பகிர்ந்துள்ளார்.