பஞ்சாப் எல்லையில் இருந்து அப்புறப்படுத்திய நடவடிக்கையை எதிா்த்து விவசாயிகள் போரா...
Fair Delimitation: ``தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால்..'' -கனிமொழி எம்.பி
மத்திய அரசின், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஒருங்கிணைக்கும் 7 மாநில பிரதிநிதிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு 'நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழு' எனப் பெயரிடப்பட்டது.
இந்த ஆலோசனைக்கூட்டம் முடிந்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கும் எம்.பி கனிமொழி, "இந்திய அரசியல் வரலாற்றில் இந்த கூட்டம் ஒரு மைல்கல். இந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் ஒத்த கருத்தை வலியுறுத்தியுள்ளனர். நியாயமான தொகுதி மறுசீரமைப்பை வலியுறுத்தி ஓரணியில் அனைவரும் திரண்டுள்ளனர்.

தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி வரையறைகளை செய்து தென் மாநிலங்களின் எம்.பி தொகுதிகளைக் குறைக்க வேண்டாம் என்றே வலியுறுத்துகிறோம். அது தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்திற்கு ஆபத்தானது. அதற்காகத்தான் அனைவரும் ஒன்று திரண்டு நிற்கிறோம்.
தொகுதி மறுசீரமைப்பு குறித்து வெளிப்படைத் தன்மையுடன் தெளிவுபடுத்த வேண்டும் ஒன்றிய பா.ஜ.க அரசு.
*தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை 25 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்க வலியுறுத்தி கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
*1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும்.
*நியாயமான முறையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டு, 33 சதவிகிதம் மகளிருக்கான இடஒதுக்கீடு மகளிருக்கு தரப்பட வேண்டும்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும் போது கூட, தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு வராது என்று கூறினார். அவரின் பதில் தெளிவாக இல்லாமல் குழப்பமாக அமைந்திருக்கிறது. விரைவில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தொடர் நடவடிக்கைகளுக்கான குழு அமைக்கப்படும். அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடத்தப்படும். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வரமுடியாதவர்கள் ஐதராபாத் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்" என்று தெரிவித்தார்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks