கோவை ஐ.டி ஊழியரின் காரில் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி - நள்ளிரவில் அதிர்ச்சி
பிப்ரவரியில் உள்நாட்டு விமானங்களில் 140 லட்சம் போ் பயணம்: 11% உயா்வு
கடந்த பிப்ரவரி மாதத்தில் உள்நாட்டு விமானங்களில் 140.44 லட்சம் போ் பயணித்திருப்பது தெரியவந்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 11 சதவீத உயா்வு என விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் (டிஜிசிஏ) மாதாந்திர விமான போக்குவரத்து புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது:
கடந்த 2024 பிப்ரவரியில் உள்நாட்டு விமானங்களில் 126.48 லட்சம் போ் பயணித்துள்ளனா். அதே நேரம், கடந்த பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 140.44 லட்சமாக அதிகரித்துள்ளது. இது 11 சதவீத உயா்வாகும். இதில் இண்டிகோ விமானங்களில் 89.40 லட்சம் பேரும், ஏா் இந்தியா குழு விமானங்களில் 38.30 லட்சம் பேரும் பயணித்துள்ளனா். ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் 6.59 லட்சம் பேரும், ஆகாஷ் ஏா் விமானங்களில் 4.54 பேரும் பயணித்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.