பதவி உயா்வு மூலம் டி.எஸ்.பி. ஆனவா்களை ஏடி.எஸ்.பி.களாக நியமிக்க இடைக்காலத் தடை
``இஸ்லாமியர்கள் எனக்கு சித்தப்பா; நான் அவர்களுக்கு மகன்'' - நோன்பு நிகழ்ச்சியில் ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு இஸ்லாமியர்களுடன் அமர்ந்து நோன்பு கஞ்சி அருந்தினார்.

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பேசும்போது, "விஸ்வகர்மா குலத்தைச் சேர்ந்த இப்ராஹிம் நபிகளின் தந்தை கடவுள் அருளால் இஸ்லாத்தை தழுவி அவரது மகன் இப்ராஹிம் இறை தூதராக இறைவனால் அனுப்பப்படுகிறார்.
இவரின் மகன்களில் ஒருவரான இஸ்மாயில் வழி வந்தவர்கள் இஸ்லாமியர்கள் எனவும், மற்றொரு மகனான யாக்கோபு வழிவந்தவர்கள் யூதர்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர். இதிலிருந்து இஸ்லாமியர்களுக்கும், விஸ்வகர்மா சமுதாயத்தில் பிறந்த எனக்கும் தொப்புள்கொடி உறவு இருப்பது உறுதியாகி உள்ளது.
எனவேதான் இஸ்லாமியர்களை நான் 'சித்தப்பா' என அழைப்பேன். அவர்கள் என்னை 'மகன்' என அழைப்பார்கள். இஸ்லாமியர்கள் பிரதிபலன் பார்க்காமல் தி.மு.க.வுக்கு வாக்களித்தார்கள். தி.மு.க. இஸ்லாமியர்களுக்கு ஒரு நலத்திட்டமும் செய்யவில்லை. இஸ்லாமியர்களை தி.மு.க. வாக்களிக்கும் இயந்திரமாக பயன்படுத்தியது.

இஸ்லாமிய பள்ளி வாசல்களுக்கு காவல்துறையை அனுப்பி சோதனை செய்த வரலாறு தி.மு.க.ஆட்சியில் உண்டு. இஸ்லாமிய இளைஞர்கள் வன்முறையாளர்களாக சித்தரிக்கப்பட்டார்கள். எஸ்.டி.பி.ஐ.கட்சியில் வீரமிக்க இளைஞர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆகவே இந்த கட்சியை முடக்க தி.மு.க. முயற்சி செய்கிறது.
இஸ்லாத்தைப் பகைத்தவர்கள் ஆண்டதாக வரலாறு கிடையாது. இஸ்லாமியர்களை நம்பியவர்கள் கெட்டதாக வரலாறு கிடையாது. அ.தி.மு.க. அவர்களை நம்பி இருக்கிறோம். ஆனால் தி.மு.க. அவர்களை வம்புக்கு இழுக்கிறது" என பேசினார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
