பிரேசிலை வீழ்த்தி 2026 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற ஆர்ஜென்டீனா!
``தமிழ் பண்பாட்டை ஆளுநர் ரவி அழகாக பாதுகாக்கிறார்'' - பார்த்திபன் பேசியது என்ன?
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் உலக காசநோய் தின நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய பார்த்திபன், "இந்த நிகழ்ச்சியை யார் நடத்துகிறார்கள் என்பது மிக மிக முக்கியமானது. இங்கு தமிழ் அழகாக மணந்து வருகிறது.

தமிழ்நாட்டில் தமிழ் பண்பாட்டை அழகாக பாதுகாக்கிறார் ஆளுநர் ரவி. அவருக்கு என்னுடைய மரியாதையை தெரியப்படுத்துகிறேன். நான் தமிழில் பேசியது, ஆளுநருக்கு புரியுமா? என்று கேட்டேன். ஆளுநர் தமிழ் கற்றுக் கொள்கிறார், அவருக்கு புரியும். அதனால் தைரியமாக தமிழிலேயே பேசலாம் என்று சொன்னார்கள்.
ஆகவே, தமிழ் புத்தகங்களை அவருக்கு நான் பரிசளித்துள்ளேன். ஒரு மனிதன் பேச ஆரம்பித்த ஐந்து நிமிடங்களில் அவன் யார் என ஆளுநருக்கு எடைபோடத் தெரிகிறது.

ஆளுநருடன் உரையாடியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. மீண்டும் அவரை ஒருமுறை சந்திக்க வேண்டும் என்கிற அளவுக்கு அவர் மீது எனக்கு அன்பு வந்துவிட்டது. ஆளுநர் செய்யும் நல்ல விஷயங்களுக்கு நானும் உடன் இருக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs