பிரேசிலை வீழ்த்தி 2026 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற ஆர்ஜென்டீனா!
US: ``வெனிசுலா உடன் வணிகம் செய்தால் 25% வரி!'' - ட்ரம்பின் புது அதிரடி; இந்தியாவை பாதிக்குமா?
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'எந்த நாடுகள் வெனிசுலா நாட்டிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குகிறதோ, அந்த நாடுகளின் மீது 25 சதவிகித வரி விதிக்கப்படும்' என்று நேற்று எச்சரித்துள்ளார்.
இதுக்குறித்து தனது ட்ரூத் பக்கத்தில், "வெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கா இரண்டாம் நிலை வரியை (அதாவது எந்த நாடு வெனிசுலா நாட்டுடன் வணிகம் வைத்திருக்கிறதோ, அந்த நாட்டின் மீது அமெரிக்கா வரி விதிக்கும்) விதிக்கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

வெனிசுலா நாடு தந்திரமாக ஆயிரக்கணக்கான மிகப்பெரிய, பயங்கர குற்றவாளிகள், கொலையாளிகள், பயங்கரவாதிகள் போன்றோர்களை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தது உள்ளிட்ட பல காரணங்களுக்காக இந்த வரி வெனிசுலா நாட்டின் மீது விதிக்கப்படுகிறது.
மிகப்பெரிய வேலை!
அப்படி அவர்கள் அனுப்பிய ஒரு குழு தான் 'வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு' என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள 'ட்ரென் டி அரகுவா' குழு. அவர்களை மீண்டும் வெனிசுலாவிற்கே அனுப்பும் பணிகளில் இருக்கிறோம். இது மிகப்பெரிய வேலை ஆகும்.
இத்துடன், வெனிசுலா நாடு அமெரிக்காவிற்கு, அதன் சுதந்திரத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அதனால், எந்த நாடு வெனிசுலா நாட்டில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குகிறதோ, அந்த நாடு அமெரிக்காவுடன் வணிகம் செய்யும்போது 25 சதவிகித வரி விதிக்கப்படும்.
இந்த வரி விதிப்பு ஏப்ரல் 2, 2025 முதல் அமலுக்கு வரும். அந்த நாள் அமெரிக்காவின் 'விடுதலை நாள்' ஆகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இந்தியாவிற்கு பாதிப்பு என்ன?
சமீபத்திய ஆண்டுகளில், வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா டாப் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும், இந்தியா வெனிசுலாவிடம் இருந்து 22 மில்லியன் பேரல் எண்ணெய் வாங்கியுள்ளது. இது இந்தியாவின் மொத்த எண்ணெய் கொள்முதலில் 1.5 சதவிகிதம் ஆகும்.
ஏற்கெனவே, வரும் ஏப்ரல் 2-ம் தேதி முதல், இந்தியாவின் மீது பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் கூறியிருந்த நிலையில், வெனிசுலா உடன் இந்தியா இந்த இறக்குமதிகளை தொடர்ந்தால் கூடுதலாக 25 சதவிகித வரி விதிக்கப்படும்.
President Donald J. Trump announced today that the United States of America will be putting what is known as a Secondary Tariff on the Country of Venezuela, for numerous reasons, including the fact that Venezuela has purposefully and deceitfully sent to the United States,…
— Donald J. Trump Posts From His Truth Social (@TrumpDailyPosts) March 24, 2025
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
