பிரேசிலை வீழ்த்தி 2026 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற ஆர்ஜென்டீனா!
மந்தி பிரியாணி சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி, மயக்கம் நாகர்கோவில் ஹோட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் லியாகத் என்ற பெயரில் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் மணவாளக்குறிச்சி அருகே உள்ள பெரியவிளை மீனவ கிராமத்தைச் சேர்ந்த அருள் என்பவர் கடந்த சனிக்கிழமை மதியம் 20 மந்தி பிரியாணி மற்றும் சிக்கன் ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.
பிரியாணி மற்றும் சிக்கனை வீட்டிற்கு கொண்டு சென்று இரவு குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிட்டுள்ளார். பிரியாணி சாப்பிட்ட சில மணி நேரத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு வாந்தி, வயிற்றுபோக்கு ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை அடுத்து சிலர் மயக்க நிலைக்குச் சென்றுள்ளனர்.

3-குழந்தைகள் 4-பெண்கள் உள்பட 17-பேருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
குளச்சல் தனியார் மருத்துவமனையி 15-பேரும் நாகர்கோவிலில் உள்ள தனியார் மனையில் 2-பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு குழந்தைகள் உடல் நடுக்கத்துடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் மணவாளக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவல் அறிந்து மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் லியாகத் ஹோட்டலில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். உணவின் தரம் குறைவாக இருந்ததால் சீல் வைத்தனர்.

பின்பு ஓட்டலில் இருந்து உணவு மற்றும் மசாலா போன்றவைகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட என்ன காரணம் என உணவு சாம்பிள்களின் ஆய்வு முடிவு வந்தால்தான் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
