பிரேசிலை வீழ்த்தி 2026 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற ஆர்ஜென்டீனா!
``ஆண்களுக்கான கேன்சர் பரிசோதனை; இனி வீட்டிலேயே செய்யலாம்'' - ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன?
கேன்சரில் பல வகைகள் இருக்கின்றன. அந்த வகையில், ஆண்களுக்கு அதிகமாக வரக்கூடிய கேன்சர்களில் இரண்டாவது இடம் புராஸ்ட்டேட் கேன்சருக்குத்தான். எந்த உடல் பாகத்தில் கேன்சர் வருகிறதோ, அதன் பெயராலேயே கேன்சரை குறிப்பிடுவோம். புராஸ்ட்டேட் என்பது ஆண்களின் உடலில் சிறுநீரகப்பைக்கு கீழே சிறுநீரகக்குழாயினை சுற்றி அமைந்துள்ள ஒரு சுரப்பி. புராஸ்ட்டேட் சுரப்பியில் உள்ள செல்கள் கட்டுக்கடங்காமல் அதிக அளவில் வளரும்போதுதான் புராஸ்ட்டேட் கேன்சர் உருவாகிறது.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம், '100 ஆண்களில் 13 நபர்கள் அவர்களது வாழ்வில் ஏதோவொரு கட்டத்தில் புராஸ்ட்டேட் புற்று நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். இதில் பெரும்பாலானவருக்கு அதிக பாதிப்பு ஏதும் இல்லை. ஆனால், வருடத்திற்கு இவற்றில் இரண்டு சதவீதம் மக்கள் புராஸ்ட்டேட் புற்று நோயினால் உயிரிழக்கிறார்கள்' என்கிறது.
ரத்த பரிசோதனை மூலமாகவோ, மலக்குடலை பரிசோதித்தோ தான் இதுவரை புராஸ்ட்டேட் கேன்சரை கண்டறிய முடிந்தது. ஆனால், இந்த இரண்டு பரிசோதனைகளையும் தொடர்ச்சியாக செய்தால் மட்டுமே இந்த கேன்சரை கண்டறிய முடியும். கேன்சர் கட்டியா, கேன்சர் அல்லாத கட்டியா என்பதை தெரிந்துகொள்ள திசு பரிசோதனை செய்தாலோ, சம்பந்தப்பட்டவர்களுக்கு காயம் ஏற்படும். ஆனால், உமிழ்நீர் சுரப்பி பரிசோதனை மூலமாக, சம்பந்தப்பட்டவருடைய உமிழ் நீரில் இருக்கிற டி.என்.ஏ மூலமாக புராஸ்ட்டேட் கேன்சர் தொடர்பான சிறிய அளவிலான மரபணு மாற்றங்களையும் கண்டுபிடித்துவிட முடியும்.

புராஸ்ட்டேட் கேன்சரின் அறிகுறிகளான, சிறுநீர் கழிப்பதற்கான கட்டுப்பாட்டு இழப்பு, மலம் கழிப்பதற்கான கட்டுப்பாட்டு இழப்பு, விந்துவுடன் ரத்தம் வெளியேறுதல், இடுப்புப்பகுதியில் வலி, மலம் கழிக்கும்போது எரிச்சலான உணர்வு, இரவு நேரங்களில் மிக அவசரமாக மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு போன்றவை ஏற்பட்டால், இந்த உமிழ்நீர் பரிசோதனையை வீட்டிலேயே செய்ய முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
