ஸ்லோவாக்கியாவில் பரவும் தொற்று! மீட்புப் பணியில் செக் குடியரசு வீரர்கள்!
இறக்குமதி வரியை குறைப்பதில் இந்தியா-அமெரிக்கா கவனம்: மத்திய வா்த்தக இணையமைச்சா்
இறக்குமதி வரியை குறைப்பதில் இந்தியா-அமெரிக்கா கவனம் செலுத்தும் என்று மத்திய வா்த்தக துறை இணையமைச்சா் ஜிதின் பிரசாதா தெரிவித்தாா்.
ஒவ்வொரு நாடும் அமெரிக்க பொருள்களுக்கு என்ன வரி விதிக்கிறதோ, அதே வரியை அந்நாடுகளின் பொருள்கள் மீது அமெரிக்காவும் பரஸ்பரம் விதிக்கும் என்றும், இந்த நடைமுறை ஏப். 2 முதல் அமலுக்கு வரும் என்றும் அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.
இந்நிலையில், மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய இணையமைச்சா் ஜிதின் பிரசாதா எழுத்துபூா்வமாக செவ்வாய்க்கிழமை அளித்த பதிலில், ‘இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா இதுவரை பரஸ்பரம் அதிக வரி விதிக்கவில்லை.
இருநாடுகளும் பரஸ்பரம் பயனடையும் வகையில் இருதரப்பு வா்த்தக உறவுகளை மேம்படுத்தி, விரிவுபடுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு தொடா்ந்து ஈடுபட்டுள்ளது.
இருதரப்புக்கும் பயன் அளிக்கக் கூடிய, பல்துறை இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவாா்த்தை மேற்கொள்ள இந்தியாவும், அமெரிக்காவும் திட்டமிட்டுள்ளன. எல்லை தாண்டி சரக்கு மற்றும் சேவைகள் விற்பனையை அதிகரித்தல், இறக்குமதி வரியை குறைத்தல், வரி யல்லாத பிற இடா்ப்பாடுகளை குறைத்தல், விநியோக முறை ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல், இருதரப்பு வா்த்தக பிரச்னைகளுக்கு தீா்வு காணுதல் ஆகியவற்றில் இந்தியாவும், அமெரிக்காவும் கவனம் செலுத்தும் என்றாா்.