செய்திகள் :

Health: தெரிந்த கிரீன் டீ, தெரியாத தகவல்கள்!

post image

கிரீன் டீ உடலுக்கு நல்லதா? எடையைக் குறைக்கிறதா? கிரீன் டீயில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன? வாருங்கள் தெரிந்துகொள்வோம். சொல்கிறார் உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சுரேந்திரன்.

vikatan
கிரீன் டீ

கிரீன் டீயில் ஃப்ளேவோனாய்டு (Flavonoid), கேட்டச்சின் (Catechin) முதலான பாலிபீனால்கள் (Polyphenol) அதிகம் உள்ளன. இவை சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களாகச் செயல்பட்டு, உடலில் உள்ள செல்கள் சிதையாமல் பாதுகாக்கின்றன.

ளமையிலேயே வயதான தோற்றம் வராமலிருக்க, தினமும் ஒரு கப் கிரீன் டீ அருந்தலாம்.

கிரீன் டீயில் சிறிதளவு காஃபின் (Caffeine) இருக்கிறது. இது மூளையில் உள்ள நியூரோ டிரான்ஸ்மீட்டர்களைத் தூண்டி, நரம்பு இயக்கங்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது. இதனால் சுறுசுறுப்பான உணர்வு கிடைக்கும். மூளை நன்றாக இயங்கும்.

vikatan
ஷைனி சுரேந்திரன்

கிரீன் டீ தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு, மறதி நோயான அல்சைமர், மூளையில் டோபோமைன் சரியாகச் சுரக்காததால் வரும் பார்கின்சன் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 25 சதவிகிதம் குறைகிறது.

ற்களில் ஸ்ட்ரெப்டோகோக்கஸ் மியூட்டன்ஸ் (Streptococcos mutans) என்ற பாக்டீரியா வளர்ந்தால், பற்கள் பாதிக்கப்பட்டு, சொத்தையாக மாறும் அபாயம் உண்டு. கிரீன் டீ குடித்தால், அதில் இருக்கும் கேட்டசின், இந்த வகை பாக்டீரியாக்களை அழித்து, பற்களைக் காக்கும்.

கிரீன் டீ இன்சுலின் செயல்பாட்டை சிறிதளவு அதிகரிக்கும். எனவே, சர்க்கரை சேர்க்காமல் கிரீன் டீ குடிப்பது, சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. கிரீன் டீயைத் தொடர்ந்து குடிப்பவர்களுக்கு, டைப்-2 சர்க்கரை நோய்க்கான வாய்ப்பு குறைகிறது.

ர்க்கரை சேர்க்காமல் கிரீன் டீ அருந்தினால், உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகள் கரையும். எனவே, உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது.

Healthy Heart
Healthy Heart

தயத்துக்குச் செல்லும் வால்வுகளில் கொழுப்புக் கட்டிகள் சேர்வதைத் தடுக்கும் வல்லமை பெற்றது கிரீன் டீ.

தய நோய்கள் அண்டாமல் இருப்பதற்கும், பக்கவாதம் வராமல் இருக்கவும் கிரீன் டீ அருந்தலாம்.

கிரீன் டீயில் அமினோ அமிலங்கள் உள்ளன. இது உடல் மற்றும் மனச் சோர்வைப் போக்கக்கூடியது. எனவே, மன அழுத்தம் உள்ள சமயங்களில் கிரீன் டீ அருந்தலாம்.

கிரீன் டீ ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது என்பதால், உடலில் தேவையற்ற கட்டிகளை வளரவிடாது. பெருங்குடல், மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகளை கிரீன் டீ குறைக்கிறது.

weight loss
weight loss

டைப் 1 சர்க்கரை நோய், சொரியாசிஸ், ரூமட்டாய்டு ஆர்த்ரைடிஸ், பெப்டிக் அல்சர் பாதிப்பு உள்ளவர்கள் கிரீன் டீ சாப்பிடலாம்.

லர்ஜி, ஆஸ்துமா, சைனஸ், வைரஸ் காய்ச்சல், அல்சர், வைரஸ் தொற்று நோய்கள் உள்ளவர்கள் கிரீன் டீ சாப்பிடக் கூடாது.

வுடராக வாங்காமல் பச்சை இலையாக இருக்கும் கிரீன் டீயாக வாங்கவும்.

கிரீன் டீ இலைகளை நீருடன் சேர்த்து, கொதிக்கவைத்து வடிகட்டி, வெதுவெதுப்பான சூட்டில் அருந்துவது உடலுக்கு நல்லது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை, வெல்லம் அல்லது தேன் போன்றவற்றைச் சேர்க்காமல் குடிக்க வேண்டும்.

தினமும் ஒன்று அல்லது இரண்டு கப் அளவுக்கு மேல் கிரீன் டீ குடிக்கக்கூடாது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

``ஆண்களுக்கான கேன்சர் பரிசோதனை; இனி வீட்டிலேயே செய்யலாம்'' - ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன?

கேன்சரில் பல வகைகள் இருக்கின்றன. அந்த வகையில், ஆண்களுக்கு அதிகமாக வரக்கூடிய கேன்சர்களில் இரண்டாவது இடம் புராஸ்ட்டேட் கேன்சருக்குத்தான். எந்த உடல் பாகத்தில் கேன்சர் வருகிறதோ, அதன் பெயராலேயே கேன்சரை குற... மேலும் பார்க்க

US: ``வெனிசுலா உடன் வணிகம் செய்தால் 25% வரி!'' - ட்ரம்பின் புது அதிரடி; இந்தியாவை பாதிக்குமா?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், 'எந்த நாடுகள் வெனிசுலா நாட்டிலிருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்குகிறதோ, அந்த நாடுகளின் மீது 25 சதவிகித வரி விதிக்கப்படும்' என்று நேற்று எச்சரித்துள்ளார். இதுக்குறித்து தனது... மேலும் பார்க்க

``தமிழ் பண்பாட்டை ஆளுநர் ரவி அழகாக பாதுகாக்கிறார்'' - பார்த்திபன் பேசியது என்ன?

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் உலக காசநோய் தின நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார். நிகழ்ச்சியி... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் வீட்டில் கொட்டப்பட்ட கழிவுநீர், தாக்குதல்.. - திருமா, இ.பி.எஸ் கண்டனம்

நேற்று யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டின் பின்பக்க கதவு வழியாக சிலர் புகுந்து, வீட்டிற்குள் கழிவு நீர் போன்றவற்றை கொட்டியுள்ளனர். மேலும், அவரது வீட்டில் இருந்த பொருள்களை அடித்து உடைத்துள்ளனர். சவுக்கு ... மேலும் பார்க்க

மந்தி பிரியாணி சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி, மயக்கம் நாகர்கோவில் ஹோட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் லியாகத் என்ற பெயரில் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் மணவாளக்குறிச்சி அருகே உள்ள பெரியவிளை மீனவ கிராமத்தைச் சேர்ந்த அருள் என்பவர் கடந்த சனிக்கிழமை மதியம்... மேலும் பார்க்க

`முன்னிறுத்தப்பட்ட இந்தி; புறக்கணிக்கப்பட்ட கன்னட மொழி' - வைரலாகும் பெங்களூர் RSS நிகழ்ச்சி

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த வெள்ளிக்கிழமை அகில பாரதிய பிரதிநிதி சபா (ABPS) கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கல... மேலும் பார்க்க