Shreyas Iyer : `சாய் சுதர்சனின் விக்கெட்டை எடுத்த ரகசியம் இதுதான்' - ஆட்டநாயகன் ...
சனிப்பெயர்ச்சி 2025 கும்பம்: சனி விலக, மாற்றம் வருமா? கொஞ்சம் கவனம் தேவை
திருக்கணிதப்படி வரும் மார்ச் 29.3.25 அன்று கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். கும்ப ராசிக்கு 2-ம் இடத்திலிருந்து பலன் தரப்போகிறார். நீங்கள் இதுவரை அனுபவித்த கஷ்டங்கள் விலகப்போகின்றன. குறிப்பாக, சதயம், பூரட்டாதி நட்சத்திரக் காரர்கள் மனப் பாரம் நீங்கி, பூரண சந்தோஷம் பெறுவார்கள்.
கும்ப ராசிக்காரர்களுக்கான 15 பலன்கள்:
1. ஜன்மச்சனி விலகும் காலம் இது. சுமார் இரண்டரை ஆண்டு காலம் படாதபாடு பட்டுவந்த நீங்கள், இப்போது சந்தோஷமாக விடுதலை பெறுகிறீர்கள். மனதில் இருந்த எதிர்மறை எண்ணங்கள், இனம்புரியாத பயம் ஆகியவை விலகும். உடல்நிலை சீராகும்.
2. சமூகத்தில் உங்களின் மதிப்பும் அந்தஸ்த்தும் அதிகரிக்கும். உங்களுக்கு மரியாதை கூடும். ஆழ்ந்த உறக்கம் வரும். இருந்தாலும் எளிய உடற்பயிற்சிகளும் உணவுக் கட்டுப்பாடுகளும் உங்களுக்குத் தேவைப்படுகிறது. பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை நீங்கும்.
3. குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். என்றாலும் பாதச்சனியாக வருவதால், கணவன் மனைவிக்குள் சிறு சிறு மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அனுசரித்துப் போங்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாதீர்கள்.
4. பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். அதேநேரம், நெருங்கிய உறவினர்களோ, நண்பர்களோ... அதிகம் உரிமையுடன் பேசி, பெயரைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். தகுதியானவர்களுக்குத் தயங்காமல் உதவி செய்யுங்கள். காலில் சிறுசிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

5. யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். வழக்குகளில் அலட்சியப் போக்குவேண்டாம். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் பெரும் அலைச்சலுக்குப் பிறகு முடியும். நீண்ட நாளாக இருந்து வந்த நோய்கள், வழக்குகள் யாவும் நல்லபடி தீரும்.
6. இந்த ராசிக்காரர்கள் திருமணம் போன்ற சுபகாரியங்கள் குறித்த திட்டமிடலைச் சற்றுத் தள்ளிப்போடுவது நல்லது. தசாபுக்திகள் சரியாக இருந்தால் திருமணம் செய்யலாம். இல்லாவிட்டால் தள்ளிப்போடவும்.
7. பொருளாதார நிலைமை ஓரளவுக்குச் சரியாக இருக்கும். கடன் பிரச்னைகள் வரும். கடன் வாங்கினாலும் குறைவாக வாங்குங்கள். அடுத்தவரை நம்பி எந்தச் செயலிலும் ஈடுபடவேண்டாம்.
8. மாணவ மாணவியர் சோம்பல், மந்தம் போன்றவற்றில் இருந்து மாறி படிப்பில் முன்னேறுவர். உயர்கல்வியைத் தொடர, விரும்பிய கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும்.
9. சனி பகவான் உங்களின் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் வேலைச்சுமை உண்டு. திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய கடனை நினைத்து அவ்வப்போது புலம்புவீர்கள்.
10. சனி பகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் திடீர் பணவரவு உண்டு. வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
11. இந்த ராசியைச் சேர்ந்த அவிட்ட நட்சத்திர அன்பர்கள், ஏற்கெனவே வம்பு வழக்கு என்று தவித்தார்கள். அதன் பாதிப்புகள் சிறிதளவு தொடரும் என்றாலும் கவலை வேண்டாம். குருவருளால் நன்மை உண்டாகும். அவிட்ட நட்சத்திர பெண்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

12. சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு, குடும்பம் மற்றும் உறவுகளுக்குள் மனஸ்தாபம் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், தகப்பன் வழி உறவுகளிடம் பொறுமையாக இருக்கவும்.
13. பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தினமும் ஏதாவது ஒரு பயத்தில் தவிப்பார்கள். செலவுகள், வேலை குறித்த அச்சம் இருக்கும். எனினும் கடந்த காலங்களில் இழந்தவை எல்லாம் திரும்பக்கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரப் பெண்களுக்கு, மனரீதியான பிரச்னைகள் விலகி, நன்மைகள் வந்து சேரும்.
14. வியாபாரிகளே, புதிய முதலீடுகள் செய்வீர்கள். விளம்பரங்கள் மூலம் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் நிம்மதி ஏற்படும். எனினும், ஒரு வருட காலத்துக்கு கடன் வாங்குவதில் கவனம் தேவை.
15. உத்தியோகஸ்தர்களே! அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். உங்களை ஆதரிக்கும் புதிய அதிகாரி வந்து சேர்வார். நீதிமன்றத் தீர்ப்புகள் சாதகமாகும்.