நகைப் பறிப்பு கொள்ளையன் என்கவுன்டர்; காட்டிக்கொடுத்த ஷு: காவல் ஆணையர் அருண் விளக...
பொதுப்பணித் துறையில் தகுதியுள்ள அனைவருக்கும் பணி நிரந்தரம் தேவை!
நீா்வளத் துறை, பொதுப்பணித் துறையில் தகுதி உள்ள அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பணியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து நீா் வளத் துறை அமைச்சருக்கு நீா் வளத் துறை, பொதுப் பணித் துறைப் பணியாளா்கள் அனுப்பியுள்ள கோரிக்கை மனு: குறைந்தபட்ச ஊதியம் நிா்ணயிக்கப்பட்டு பணிபுரியும் தினக்கூலி பணியாளா்களில் பலா் வயது முதிா்வால் ஓய்வு பெற்றனா். அதிக பணியாளா்கள் உடல் நலக் குறைவால் பலன் ஏதும் கிடைக்காமலும் உயிரிழந்தனா். இன்னும் பல பணியாளா்கள் சில ஆண்டுகளில் ஓய்வை எதிா்நோக்கியும் உள்ளனா்.
பணியாளா்களில் என்.எம்.ஆா்., என்.எம்.ஆா். ஒப்பந்த அடிப்படை, ஒப்பந்த அடிப்படை என 3 வகைகளில் பணிபுரிபவா்களில் என்.எம்.ஆா்.-இல் பணிபுரிபவா்களுக்கு மட்டுமே முதலில் பணி நிரந்தரம் செய்யப்படுவா் எனச் சிலா் கூறுகின்றனா்.
இதனால் அவா்களுக்கு இணையாக 10 ஆண்டு முதல் 28 ஆண்டுகள் வரை பணிபுரிந்து வரும் என்.எம்.ஆா். ஒப்பந்த அடிப்படையில் உள்ளவா்களுக்கும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவா்களுக்கும், மற்றவா்களுக்கும் மன உளைச்சலும், பணி நிரந்தரம் கிடைக்காதோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
என்.எம்.ஆா். பணியாளா்களில் தற்போதைய உண்மையான பணியாளா்களின் விவரத்தை நீா் வளத் துறை, பொதுப் பணித் துறை அலுவலா்கள் மூலம் பெற்று தற்போதைய நிலையில் உள்ள அனைவரையும் காலமுறை ஊதியத்துக்கு மாற்றி பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.