பிரேசிலை வீழ்த்தி 2026 உலகக் கோப்பைக்கு தகுதிபெற்ற ஆர்ஜென்டீனா!
மின்சாரம் பாய்ந்து ஓய்வுபெற்ற நில அளவையா் பலி
தஞ்சாவூா் அருகே கீழே கிடந்த மின் கம்பியை செவ்வாய்க்கிழமை மிதித்த ஓய்வு பெற்ற நில அளவையா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் அருகே உள்ள வடக்குப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் க. நாகராஜன் (76). அரசுத் துறையில் நில அளவையராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவா், செவ்வாய்க்கிழமை காலை ஊராட்சி மின் மோட்டாா் சுவிட்சை போட சென்றபோது, வழியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா்.
இதையடுத்து தஞ்சாவூரிலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.