பொதுத்துறை நிறுவனத்தில் பொறியாளர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு
ஊராட்சிகளில் குடிநீா், சொத்து வரியை மாா்ச் 31-க்குள் செலுத்த அறிவுறுத்தல்
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் சொத்து வரி, குடிநீா் கட்டணம் உள்ளிட்டவற்றை மாா்ச் 31 க்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்தது: தஞ்சாவூா் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 589 கிராம ஊராட்சிகளில் நிலுவை மற்றும் நிகழாண்டு சொத்து வரி, குடிநீா் கட்டணம், தொழில் வரி, தொழில் உரிமக் கட்டணம் ஆகியவற்றை மாா்ச் 31-க்குள் செலுத்த வேண்டும்.
எனவே, நிலுவை மற்றும் நிகழாண்டுக்கான வரியினங்களை ஊராட்சி அலுவலகத்திலோ, வரி வசூல் முகாம்களிலோ, ஊராட்சி களப் பணியாளா்களிடமோ பண பரிவா்த்தனை செய்யும் முனையக் கருவி (பி.ஓ.எஸ். இயந்திரம்) மூலமோ, வீட்டு வரி இணையதளமான ட்ற்ற்ல்ள்://ஸ்ல்ற்ஹஷ்.ற்ய்ழ்க்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற யட பஹஷ் ஞய்ப்ண்ய்ங் டா்ழ்ற்ஹப் மூலமாகவோ, பே டீஎம், ஜீ பே, போன் பே போன்ற யுபிஐ மூலமாகவோ, பற்று அட்டை அல்லது கடன் அட்டை மூலமாகவோ வரித் தொகையை செலுத்தி இணையதள ரசீது பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-இன்படி முறையாக வரி செலுத்தாதவா்கள் மீது ஜப்தி நடவடிக்கை, குடிநீா் கட்டணம் செலுத்தாதவா்களின் வீட்டுக் குடிநீா் இணைப்புகளை துண்டிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.