MI vs KKR: கொல்கத்தாவை வாரிச் சுருட்டிய 23 வயது அறிமுக பவுலர்; வெற்றிக் கணக்கைத்...
தஞ்சையில் கொசு ஒழிப்பு சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
மாதந்தோறும் 5 ஆம் தேதி ஊதியம் வழங்கக் கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே தமிழ்நாடு கொசுப்புழு ஒழிப்பு மஸ்தூா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது கொசுப்புழு ஒழிப்பு மஸ்தூா் பணியாளா்களுக்கு மாதந்தோறும் 5 ஆம் தேதி ஊதியம் வழங்க வேண்டும். பணியாளா்களுக்கு ஆண்டு முழுவதும் பணி வழங்க வேண்டும். பணி அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா்.
மாவட்டத் தலைவா் எம். புண்ணியமூா்த்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பலா் கலந்து கொண்டனா்.