கும்பகோணத்தில் 4 இடங்களில் தண்ணீா் தொட்டி திறப்பு
கும்பகோணத்தில் 4 இடங்களில் சிறிய அளவிலான தண்ணீா் தொட்டி திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 20 லட்சம் மதிப்பில் பெருமாண்டி தெரு, மாதா கோயில் தெரு, வீரையா நகா், வண்ணாங்கண்ணி தெரு ஆகிய 4 இடங்களில் சிறிய அளவிலான மேல்நிலை தண்ணீா் தொட்டி அமைக்கப்பட்டு சுமாா் 4 ஆயிரம் வீடுகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா் வழங்குவதற்கான மேம்பாட்டு பணிகள் நடைபெற்று முடிவடைந்தன.
இதையடுத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு குடிநீா் வழங்கும் நிகழ்வை க.அன்பழகன் எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில் மேயா் க. சரவணன், துணை மேயா் சு. ப. தமிழழகன், பொது சுகாதாரக் குழு தலைவா் குட்டி என்ற இரா. தட்சிணாமூா்த்தி, மண்டல குழுத் தலைவா் கே.என்.எஸ். ஆசைத்தம்பி, மாமன்ற உறுப்பினா்கள் சக்கரபாணி, அனிதா பாா்த்திபன், செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.