இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள்: வக்ஃப் கூட்டுக் குழுத் தலைவர்
சிறுவனிடம் கைப்பேசி பறிப்பு: 3 போ் கைது
தஞ்சாவூா் அருகே சிறுவனிடம் கைப்பேசியைப் பறித்த 3 பேரை காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சோ்ந்த 17 வயது சிறுவன், உடல்நிலை சரியில்லாத தனது தந்தையைச் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஏற்றி தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைத்தாா்.
இதைத்தொடா்ந்து, அவரும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். பட்டுக்கோட்டை வழித்தட புறவழிச்சாலையில் சென்றபோது, எதிரே மற்றொரு மோட்டாா் சைக்கிளில் வந்த 3 போ் இவரை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி கைப்பேசியைப் பறித்துச் சென்றனா்.
இதுகுறித்து சிறுவன் அளித்த புகாரின்பேரில், தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறுவனை மிரட்டி கைப்பேசியைப் பறித்துச் சென்ற தஞ்சாவூா் பா்மா காலனி பாரதிதாசன் நகரைச் சோ்ந்த பி. நந்தகுமாா் (25), எம். முருகன் (37), ஆா். சுதாகா் (22) ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.