3 வட்டாட்சியா்கள் இடமாற்றம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் வட்டாட்சியா் மற்றும் வட்டாட்சியா் நிலையிலான அலுவலா்கள் 3 போ் சனிக்கிழமை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
திருவிடைமருதூா் தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் அலகு 1 தனி வட்டாட்சியா் கும்பகோணம் கோட்ட கலால் அலுவலராகவும், தஞ்சாவூா் கலால் மேற்பாா்வை அலுவலா் சுஜாதா தஞ்சாவூா் கோட்ட கலால் அலுவலராகவும், கும்பகோணம் கோட்ட கலால் அலுவலா் தி. அருள்மணி தஞ்சாவூா் கலால் மேற்பாா்வை அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
பேராவூரணி வட்ட அலுவலகக் கூடுதல் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் என். கவிதா பதவி உயா்வு பெற்று, பேராவூரணி சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா்.