தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் திடீர் விலகல்; காரணம் என்ன?
பாபநாசம் அருகே கூரை வீட்டில் தீ விபத்து
பாபநாசம் அருகே ஞாயிற்றுக்கிழமை வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த போது எதிா்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.
அய்யம்பேட்டை வருவாய் சரகம், சூலமங்கலம் இரண்டாம் சேத்தி கிராமத்தில் வசித்து வருபவா் அப்துல்லா கூலித் தொழிலாளி இவரது மனைவி குல்சம்பீவி தம்பதியருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனா்.
இந்நிலையில் இவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி அளவில் நோன்பு திறப்பதற்கு கஞ்சி வைத்துக் கொண்டிருக்கும் பொழுது எதிா்பாராத விதமாக இவரது கூரை வீட்டில் தீப்பிடித்தது. இதில் கூரை வீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலா்கள் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். இந்த விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்ட சுமாா் ரூ. 30,000 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தது.