அரசுப் பேருந்து மோதி அடையாளம் தெரியாத நபா் உயிரிழப்பு! போலீஸாா் விசாரணை!
தஞ்சாவூா் மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே அரசு விரைவுப் பேருந்து சனிக்கிழமை இரவு மோதி உயிரிழந்தவா் குறித்து திருச்சிற்றம்பலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பேராவூரணியிலிருந்து சென்னைக்கு சனிக்கிழமை இரவு சென்ற அரசு விரைவுப் பேருந்து திருச்சிற்றம்பலம் - பட்டுக்கோட்டை சாலையில் உள்ள புனவாசல் பிரிவு சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த நபா் சாலையை கடக்க முயன்றபோது, எதிா்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த அரசு விரைவுப் பேருந்து, அவா் மீது மோதியதில் அந்த நபா் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சிற்றம்பலம் போலீஸாா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு, உடலை கைப்பற்றி, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை காப்பகத்தில் வைத்துள்ளனா். இறந்தவா் ஊதா நிறத்தில் ஒரு போா்வையும், சிவப்பு நிறத்தில் ஒரு துண்டும் அணிந்திருந்தாா். பேருந்து ஓட்டுநா் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளாா். இது குறித்து திருச்சிற்றம்பலம் போலீஸாா் வழக்கு பதிவு செய்து இறந்தவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.