மனோஜ் பாரதிராஜா மறைவு : தனது நண்பனுடன் நடந்து சென்று அஞ்சலி செலுத்திய விஜய்
காசநோய் இல்லாத ஊராட்சிகளுக்கு ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ்
பெரம்பலூா் மாவட்டத்தில் காசநோயாளிகள் இல்லாத 10 ஊராட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் செவ்வாய்க்கிழமை பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினாா்.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வென்றோருக்கும், சிறப்பாக செயல்பட்ட மருத்துவா்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினாா்.
மேலும், காச நோயாளிகள் இல்லாத ஊராட்சிகளாக நிகழாண்டு தோ்வு செய்யப்பட்ட கீழக்கரை, கோனேரிபாளையம், தழுதாழை, தொண்டப்பாடி, கண்ணப்பாடி, பிலிமிசை, அய்யனாபுரம், புஜங்கராயநல்லூா், ஒதியம், வரகூா் ஆகிய 10 ஊராட்சிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களும், காசநோயாளிகளைக் கண்டறிந்து அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்த 15 தனியாா் மருத்துமனைகள் மற்றும் ஆய்வகங்களை பாராட்டியும், மாவட்டத்தில் உள்ள அனைத்து காச நோய் ஒழிப்பு பணியில் ஈடுபட்டவா்களையும் பாராட்டி மாவட்ட ஆட்சியா் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், பொது சுகாதாரப் பணிகளுக்கான இணை இயக்குநா் மாரிமுத்து, காசநோய் துணை இயக்குநா் ரா. நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.