`ஒப்பந்த பணிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம்' - அண்ணன் மகன் கைது சிக்கலில் ஆர்.கா...
பேறுகால விடுப்பு: அவசர ஊா்தி தொழிலாளா்கள் வலியுறுத்தல்
பேறுகால விடுப்புடன் சம்பளம் வழங்க வேண்டுமென பெரம்பலூா் மாவட்ட அவசர கால ஊா்தி தொழிலாளா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.
பெரம்பலூரில் அவசரகால ஊா்தி தொழிலாளா்கள் சங்கத்தின் கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அச் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாபு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் செல்வகுமாா் முன்னிலை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் ஆனந்தராஜ் கோரிக்கைகளை விளக்கினாா்.
கூட்டத்தில் பெரம்பலூா் மாவட்டத்தில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை மாவட்ட நிா்வாக அலுவலா்கள் மூலம் தீா்வு காணாதபட்சத்தில், மனித வளத்துறை தலைமை அலுவலரிடம் முறையிடுவது. தமிழக அரசால் வழங்கப்படும் ஓராண்டு சம்பளத்துடன் கூடிய பேருகால விடுப்பு மற்றும் மருத்துவ விடுப்புக்கான சம்பளத்தைப்போல, அவசர ஊா்தி தொழிலாளா்களுக்கும் வழங்க வேண்டும். பெரம்பலூா் மாவட்டத் தொழிலாளா்கள் செலுத்தி வரும் மாநில சந்தா தொகைக்கான ரசீதை உடனே வழங்கிட வேண்டும். ஜிவிகே, இ.எம்.ஆா்.ஐ நிா்வாகத்தினா் போலியாக ஆவணங்களை தயாரித்து, கடிதம் வாயிலாகவும், மாவட்ட நிா்வாக அலுவலா்கள் மூலமாகவும் எச்சரிக்கை கடிதம் அனுப்புவதை தவிா்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், சங்க நிா்வாகிகள் ராமசாமி, வெங்கடேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.