செய்திகள் :

'அதிமுக, பாஜக, பாமக... நாங்க எல்லாம் கூட்டணிங்க' - ஹின்ட் குடுத்த திண்டுக்கல் சீனிவாசன்

post image

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை 2 மணிநேரம் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

ஆனால் பாஜக- அதிமுக கூட்டணி குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அவர்கள் அறிவிக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை தமிழக சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக எம்.எல்.ஏ.க்கள் வருகை தந்தனர்.

திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் சீனிவாசன்

அப்போது அதிமுகவின் திண்டுக்கல் சீனிவாசன், பாமகவின் ஜிகே மணி உள்ளிட்ட எம்.எல்.ஏக்களுடன் சிரித்து பேசியபடியே வந்தார். செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பயதற்கு திண்டுக்கல் சீனிவாசன், " அதிமுக, பாமக, பாஜக எல்லாம் ஒன்றுதான். நாங்கள் எல்லாம் கூட்டணிங்க" என்றார்.

அதேபோல அமித் ஷாவை 'இரும்பு மனிதர்' என புகழ்ந்து ஏற்கெனவே ஆர்.பி.உதயகுமார் வீடியோ வெளியிட்டிருந்தார். அதிமுகவினரின் அடுத்தடுத்த பேச்சு, நடவடிக்கைகள் பாஜகவுடன் கூட்டணி உறுதியாவதைக் காட்டுகின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

"எதையும் மாற்றிப் பேசவில்லை; எந்தக் கட்சியையும் அழித்து வளர மாட்டோம்" - அண்ணாமலை

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கூட்டணி குறித்து நான் பேச முடியாது. உள்துறைஅமைச்சரின்கருத்தையே இறுதியாக எடுத்துக் கொள்ளுங்கள்.... மேலும் பார்க்க

"திமுக கூட்டணி, சூட்கேஸ் கூட்டணி; கொள்கைக் கூட்டணி கிடையாது" - சொல்கிறார் செல்லூர் ராஜூ

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடிமங்கலம் புதூர் கிராமத்தில் நடந்த விழாவில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசும்போது, "100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்திக் ... மேலும் பார்க்க

`உரையாடல்கள் ஒட்டு கேட்கப்படுகின்றன; திமுக நிர்வாகிகள் கவனமாக பேசவேண்டும்'- ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

ராமேஸ்வரம் நகர் திமுக சார்பில் பட்ஜெட் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நகர் மன்ற தலைவர் நாசர் கான் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறைப்புரையாற்றிய திமுக-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ''யார் கட... மேலும் பார்க்க

'இது கட்டமைக்கப்பட்ட சுரண்டல்!' ஏ.டி.எம்மில் பணம் எடுத்தால் ரூ.23 வரை கட்டணம்- RBI; ஸ்டாலின் கண்டனம்

வரும் மே மாதம் முதல், ஒரு மாதத்தில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஏ.டி.எம்களில் எடுக்கப்படும் பணத்திற்கு ரூ.2-ல் இருந்து ரூ.23 வரை வங்கிகள் கட்டணம் விதிக்கலாம் என்று கடந்த வெள்ளிக்கிழமை இந்திய ரிசர்வ் வங்... மேலும் பார்க்க

``ஒரு வார்டு எலெக்‌ஷனில்கூட நிற்கவில்லை; அதற்குள் அடுத்த முதல்வராம்’’ - திருமா காட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் பேருந்து நிலையம் அருகிலுள்ள தென்பள்ளிப்பட்டில், வி.சி.க தேர்தல் அங்கீகார வெற்றி விழா நேற்று இரவு நடைபெற்றது. வி.சி.க மகளிர் விடுதலை இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்... மேலும் பார்க்க

"19 மாணவச் செல்வங்களின் உயிர்களுக்கு பதில் என்ன?" - தனுஷ் டு தர்ஷினி நீட் மரணங்கள் - இபிஸ் கேள்வி!

நீட் தேர்வு பயத்தினால் தற்கொலை செய்துகொண்ட தேவதர்ஷினி குறித்து தனது எக்ஸ் தளத்தில் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டிருக்கிறார். அதில், "நீட் தேர்வு அச்சத்தால் சென்னையில் தர்ஷின... மேலும் பார்க்க