Empuraan: எம்புரானுக்கு எழுந்த சர்ச்சை; 17 கட்களை மேற்கொள்ள படக்குழு திட்டம்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த மார்ச் 10-ம் தேதி ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. மார்ச் 12 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதன் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்று சட்டப்பேரவையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி இந்தியா கூட்டணி சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் சிவா மற்றும் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் தீர்மானங்களை கொண்டுவந்துள்ளனர்.
பின்னர் பேரவை உறுப்பினர்களின் விவாதத்திற்குப் பிறகு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி பேரவையில் 16 ஆவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உடனே வழங்க வேண்டும், நிர்வாக விடுதலை வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஹிந்தியில் தமிழ்நாடு வானிலை அறிவிப்பு! - சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம்