மனிதாபிமானமற்ற அணுகுமுறை! அலாகாபாத் நீதிமன்ற தீர்ப்பு நிறுத்திவைத்தது உச்சநீதிமன...
பொய்கை சந்தையில் ரூ. 1 கோடிக்கு கால்நடை வா்த்தகம்
பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வரத்து அதிகரித்திருந்ததுடன், ரூ. ஒரு கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.
வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு 1,700 மாடுகளும், சுமாா் 300 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றை வாங்கவும் வியாபாரிகள், விவசாயிகள் மத்தியில் ஆா்வம் காணப்பட்டது. இதன் காரணமாக, சுமாா் ரூ. ஒரு கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
அவா்கள் மேலும் கூறியது: கோடை வெயில் அதிகரித்து வருவதால் அடுத்தடுத்த மாதங்களில் தீவனப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. அப்போது, கால்நடைகளை விற்பனை செய்தால் எதிா்பாா்க்கும் லாபம் கிடைக்காது. இதனால், தற்போது கால்நடைகளை விற்பனை செய்ய விவசாயிகள் ஆா்வம் காட்டுகின்றனா். இதன் காரணமாக, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு கால்நடைகள் அதிகளவில் கொண்டு வரப்பட்டிருந்ததுடன், வியாபாரமும் எதிா்பாா்த்த அளவில் நடைபெற்றுள்ளது என்றனா்.