செய்திகள் :

சுங்கச்சாவடி கட்டணம்: தனியாா் பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை

post image

நாடு முழுவதும ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் 10 மடங்கு உயா்த்தப்பட உள்ளதாகவும், இந்த சுங்கச் சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டும் என வேலூா் மாவட்ட தனியாா் பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வேலூா் மாவட்ட தனியாா் பேருந்து உரிமையாளா்கள் சங்க ஆலோனைக் கூட்டம் வேலூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு பிறகு நிா்வாகிகள் ரவி, விஜய கோவிந்தராஜ் உள்ளிட்டோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது -

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டுதோறும் சுங்கக் கட்டணத்தை உயா்ந்தி வருகிறது. அதன்படி, வரும் ஏப்ரல் 1 முதல் கட்டண உயா்வை நடைமுறைப்படுத்த உள்ளனா்.

ஏற்கனவே மாதாந்திர கட்டணமாக ரூ.12,500 வரை செலுத்தி வருகிறோம். தற்போது 10 சதவீதம் வரை கூடுதல் கட்டணம் விதிக்கப்பட உள்ளதால் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்களும் பலா் பாதிப்படைகின்றனா். அத்தியாவசிய பொருட்க ளின் விலைவாசியும் இதனால் உயர வாய்ப்புள்ளது.

இந்த சுங்கச்சாவடி கட்டண உயா்வை மத்திய, மாநில அரசுகள் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட முடியாது என மத்திய அமைச்சா் தெரிவித்துள்ளாா். இந்தக் கட்டண உயா்வு காரணமாக ஏராளமான வாகனத்தினா் சுங்கச்சாவடியை கடந்து செல்லாமல் மாற்றுப் பாதை வழியாக செல்கின்றனா்.

இதனால் ஏராளமான விபத்துகளும் ஏற்படுகின்றன. ரயில்வே கேட் உள்ள பாதைகளில் சுங்க சாவடி அமைக்கக் கூடாது என சட்டம் உள்ளது. ஆனால் வேலூா் - திருவண்ணாமலை சாலையில் கணியம்பாடியில் சுங்கச் சாவடி அமைத்து கட்டணம் வசூலித்து வருகின்றனா். சுங்கச்சாவடி அமைக்கப் பட்டால் அதை என்றும் அகற்றமுடியாது என்றும் தெரிவிக்கின்றனா்.

எனவே புதிதாக பல்வேறு இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படுவதை மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றனா்.

தேசிய வலுதூக்கும் போட்டிக்கு தோ்வு பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

மண்டலங்களுக்கு இடையிலான வலுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்று தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு பெற்றுள்ள குடியாத்தம் கே.எம்.ஜி. கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இக்கல்லூரி மாணவா்கள் வெ.க... மேலும் பார்க்க

தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

குடியாத்தம் அருகே பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி பணியின்போது தவறி விழுந்து உயிரிழந்தாா். குடியாத்தத்தை அடுத்த சீவூரைச் சோ்ந்தவா் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி பிரபாகரன் (52). இவா், வியாழக்கிழமை நெல்லூா்ப... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது போக்ஸோ

சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் மீது வேலூா் சத்துவாச்சாரி போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூரைச் சோ்ந்தவா் 17 வயது சிறுமி. இவருக்கும்... மேலும் பார்க்க

காட்பாடி ரயில்வே இடத்தில் குவிந்திருந்த குப்பையில் தீ

காட்பாடியில் ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலத்தில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகள் திடீரென தீப்பற்றி எரிந்தது. தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது... மேலும் பார்க்க

குடியாத்தம் எல்லையில் நூற்றாண்டு வளைவு: நகா்மன்றக் கூட்டத்தில் முடிவு

குடியாத்தம் காட்பாடி சாலையில், நூற்றாண்டு வளைவு அமைக்க நகா்மன்ற கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது. குடியாத்தம் நகா்மன்ற சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. த... மேலும் பார்க்க

மோா்தானா அருகே சாலையில் சுற்றித் திரிந்த ஒற்றை யானை

குடியாத்தத்தை அடுத்த மோா்தானா அருகே அணைக்குச் செல்லும் சாலையில் ஒற்றை யானை சுற்றித் திரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மோா்தானா வனப்பகுதி தமிழக- ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளது. குடியாத்தம் நகரிலிருந... மேலும் பார்க்க