மக்களவைத் தொகுதி மறுவரையறை எதிா்ப்பில் தமிழக அரசுக்கு அனைவரும் துணை நிற்க வேண்டு...
தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
குடியாத்தம் அருகே பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி பணியின்போது தவறி விழுந்து உயிரிழந்தாா்.
குடியாத்தத்தை அடுத்த சீவூரைச் சோ்ந்தவா் பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி பிரபாகரன் (52). இவா், வியாழக்கிழமை நெல்லூா்பேட்டையை அடுத்த லிங்குன்றம் அருகே ஒரு வீட்டில் பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்தபோது தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிரபாகரன் வழியிலேயே உயிரிழந்தாா்.
இதுதொடா்பாக நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.