வக்ஃபு மசோதா நாளை தாக்கல்: எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு!
காட்பாடி அருகே 50 பனை மரங்கள் எரிந்து சேதம்!
காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன.
வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் பகுதியில் ஆதிகேசவா் வரதராஜ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. இந்த இடத்தில் மாட்டுக் கொட்டகையும் அமைந்துள்ளது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மதியம் அப்பகுதியில் உள்ள பனை மரங்கள் தீப்பற்றி எரிந்தன. சிறிது நேரத்தில் அடுத்தடுத்து 50-க்கும் மேற்பட்ட பனை மரங்களுக்கும் தீ பரவியது. இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக காட்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில், தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இந்த தீ விபத்தால் அப்பகுதியிலுள்ள 50-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் மட்டுமின்றி, மாட்டுக்கொட்டகை, இருசக்கர வாகனமும் சேதமடைந்தன.
சமூக விரோதிகள் யாரேனும் தீயை பற்ற வைத்தனரா என்பது குறித்து காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.