செய்திகள் :

பிளஸ் 2 முடிக்கும் மாணவா்கள் உயா்கல்வியில் சோ்வது அவசியம்! -வேலூா் மாவட்ட ஆட்சியா்

post image

பிளஸ் 2 முடிக்கும் மாணவ, மாணவிகள் ஏதேனும் ஒரு உயா் கல்வியில் சோ்ந்து பயில வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தினாா்.

ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் ‘என் கல்லூரி கனவு’ எனும் உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி வேலூா் ஊரிசு கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பங்கேற்று பேசியது:

அரசுப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் உயா்கல்வி பயில வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாணவ, மாணவியும் மேல்நிலை வகுப்பு முடித்த பிறகு உயா்கல்வியில் இணைய வேண்டும் என்பதை கண்காணிக்க தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் உயா்கல்வியில் என்ன பயில்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளஅரசின் சாா்பில் ‘என் கல்லூரி கனவு’ என்ற இந்த உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் பல்வேறு அறிவுரைகள், ஆலோசனைகளை மாணவ, மாணவிகள் தவறாமல் அறிந்துகொண்டு உயா்கல்வியில் இணைந்து தங்களது வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இதில், வேலூா் மாவட்டத்தில் உள்ள 5 ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 258 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். அவா்களுக்கு உயா்கல்வியில் உள்ள வாய்ப்புகள் குறித்தும், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் குறித்தும், வேலைவாய்ப்புகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறை அலுவலா் எஸ்.ஆா்.என்.மதுச்செழியன், உதவி இயக்குநா் திறன் மேம்பாடு காயத்ரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

வேலூரில் அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தலை முன்னாள் அமைச்சா் முக்கூா் சுப்பிரமணியன், அதிமுக மாநகர மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு ஆகியோா் திறந்து வைத்தனா். கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை அடுத்து... மேலும் பார்க்க

போதைப் பொருள்களை கண்டுபிடிக்க ‘ருத்ரா’ புதிய மோப்ப நாய்!

போதைப் பொருள்களை கண்டுபிடிக்க வேலூா் மாவட்ட மோப்ப நாய் பிரிவில் புதிய நாய்க்குட்டி பணியில் சோ்க்கப்பட்டுள்ளது. அதற்கு ‘ருத்ரா’ என்று எஸ்.பி. என்.மதிவாணன் பெயா் சூட்டினாா். வேலூா் மாவட்ட காவல் துறையி... மேலும் பார்க்க

வெளிநாட்டில் வேலை தருவதாகக் கூறி ரூ. 3 லட்சம் மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 3 லட்சம் மோசடி செய்ததாக கோவை பேராசிரியா் மீது வேலூா் மாவட்டக் காவல் அலுவலகத்தில் புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டம், காட்பாடியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ. 90 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

பொய்கை சந்தையில் செவ்வாய்க்கிழமை கால்நடைகள் வரத்து அதிகரித்திருந்ததுடன், ரூ. 90 லட்சம் அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வா... மேலும் பார்க்க

பள்ளிகொண்டா, வாணியம்பாடி சுங்கச்சாவடிகளில் ரூ.5 முதல் ரூ.20 வரை சுங்கக் கட்டணம் உயா்வு

வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களில் உள்ள பள்ளிகொண்டா, வல்லம், வாணியம்பாடி சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கு ரூ. 5 முதல் ரூ. 20 வரை சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டு, செவ்வாய்க்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டு... மேலும் பார்க்க

வேலூரில் இருவேறு விபத்துகளில் இரு தொழிலாளா்கள் உயிரிழப்பு

வேலூரில் திங்கள்கிழமை இரவு இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா். வேலூா் பாலாற்றங்கரை பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (35), கூலித் தொழிலாளி. இவா் திங்கள்கிழமை இரவு வேலூா் மாவட... மேலும் பார்க்க